டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு

Tourist Family Movie Deleted Scene | நடிகர்கள் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்து வரும் படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தில் இருந்து டெலீட்டட் சீனை படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்திலிருந்து டெலீட்டட் சீனை வெளியிட்ட படக்குழு

டூரிஸ்ட் ஃபேமிலி

Published: 

15 May 2025 19:31 PM

நடிகர் சசிகுமர் (Actor Sasikumar) நடிப்பில் மே மாதம் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நாயகியாக நடிகை சிம்ரன் நடித்திருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் மிதுன் ஜெய் சங்கர், யோகி பாபு, காமேஷ், எம்.எஸ்.பாஸ்கர், பக்ஸ், ரமேஷ் திலக் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது போல பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் கலக்கி வருகின்றது. குறைவான பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் நல்ல வசூலைப் பெற்று வருவது படக்குழுவினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சமீபத்தில் இந்தப் படத்தின் வெற்றி விழாவைப் படக்குழு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் படத்தப் பார்த்த ரசிகர்களும் பிரலங்களும் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து படக்குழுவிற்கு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்தை தொலைபேசியில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்திருந்தார். இதுகுறித்து இயக்குநர் தனது இன்ஸ்டாபதிவில் தெரிவித்து மகிழ்ச்சி தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல பிரபலங்களும் படக்குழுவிற்கு வாழ்த்துகளை தெரிவித்தது.

சீரியசான டாபிக்கை வைத்து ஃபீல் குட் படத்தை கொடுத்த இயக்குநருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர். படம் ஒரு நல்ல ஃபீல் குட் என்று ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படத்தில் பல ரீ கிரியேட் மொமண்ட்களை வைத்திருத்தார் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.

இணையத்தில் வைரலாகும் டெலீட்டட் சீன்:

அதில் ஒன்று அந்த ஏரியாவில் நடக்கும் விழா ஒன்றில் நடிகை சிம்ரன் நடனம் ஆடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த சீனில் நடிகை சிம்ரன் விஜயுடன் இணைந்து நடனம் ஆடும் அட ஆல்தோட்ட பூபதி பாடல் ஆகும். யூத் படத்தில் இந்த ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சிம்ரன் நடனம் ஆடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடலின் ஒரு சிறிய காட்சியை மட்டும் நடிகை சிம்ரன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் ஆடியிருப்பார். அதனை திரையரங்குகளில் பார்த்த ரசிகர்கள் ஆரவாரம் செய்து கொண்டடினர். இந்த நிலையில் இதே போல நடிகர் சசிகுமாரின் பாடல் ஒன்றும் இந்தப் படத்தில் ரீ கிரியேட் செய்துள்ளனர். அந்த வீடியோவைப் படக்குழு தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளது.