திருமண வாழ்க்கையை காப்பாற்ற என் பெற்றோரை கூட பிரிந்து இருந்தேன் – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி மோகன்…

Actor Ravi Mohan: இந்தியா முழுவதும் போர் சூழல் காரணமாக பதற்றமாக இருந்த சூழலில் எனது சொந்த வாழ்க்கை தலைப்புச் செய்திகளில் வந்த மிகவும் வேதனை அளிக்கும் ஒன்றாக இருந்தது என்று நடிகர் ரவி மோகன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண வாழ்க்கையை காப்பாற்ற என் பெற்றோரை கூட பிரிந்து இருந்தேன் - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவி மோகன்...

ரவி மோகன்

Published: 

15 May 2025 14:47 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan) கடந்த ஆண்டு தனது மனைவியை விட்டு பிரிவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பல வதந்திகள் அவரை சுற்றி வரும் நிலையில் சமீபத்தில் ஐசரி கணேஷின் இல்ல திருமண விழாவிற்கு தனது தோழி கெனிஷா உடன் வந்தது இணையத்தில் வைரலானது. அதனை தொடர்ந்து அவரது மனைவி ஆர்த்தி வெளியிட்ட இன்ஸ்டா பதிவும் தீயாய் பரவத் தொடங்கியது. மேலும் ரவி மோகன் மீது பலரும் குற்றம்சாட்ட தொடங்கினர். இந்த நிலையில் நடிகர் ரவி மோகன் இந்த பிரச்னையில் தனது மௌனத்தை கலைத்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 பக்கங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் தான் ஏன் அந்த திருமண வாழ்க்கையில் இருந்து வெளியே வந்தேன் என்றும் கெனிஷா உடனான உறவு குறித்தும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, நாட்டில் போர் சூழல் நிலவி வரும் இந்த நிலையில் எனது சொந்த வாழ்க்கை மக்களின் கருத்துகளிலும், காசிப்பாகவும் உண்மைகளை திருத்து பேசுவது மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. நான் அமைதியாக இருப்பது எனது இயலாமை கிடையாது. என் அமைதியான வாழ்க்கைகாக. என்னை பற்றி எதுவுமே தெரியாதவர்கள் என் அமைதியை கேள்விக்கு உள்ளாக்கும் போது நான் பேசிதான் ஆகவேண்டும்.

என்னுடைய வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க எனது சொந்த உழைப்பு மட்டுமே காரணம். மட்டமான சிம்பத்தியை பயன்படுத்தி எனது புகழை எடுத்துக்கொள்ள நினைப்பவர்களை நான் ஒருபோது அனுமதிக்க மாட்டேன். இது விளையாட்டு அல்ல. எனது வாழ்க்கை. நான் எனது வாழ்க்கைகான சரியான நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அது நிச்சயம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன்.

இத்தனை வயதான நான், கடந்த சில வருடங்களாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், நிதி ரீதியாகவும் (வருத்தத்துடன் சொல்கிறேன்)  துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளேன். எனது திருமண வாழ்க்கையை பாதுகாப்பதற்காக எனது பெற்றோரை சந்திக்க கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த சூழலில் இருந்து வெளியே வர எனக்கு மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. ஏன் இதை எழுதும் போதுகூட எனக்கு அவ்வளவு மன வேதனையாக உள்ளது.

எனது வாழ்க்கையில் நடந்தது குறித்து எனது பெற்றோரிடமும், என் நெருங்கிய நண்பர்களிடமும் நான் வெளிப்படையாக பேசியுள்ளேன். இந்த திருமண வாழ்க்கையை விட்டு வெளியே வர நானாக முடிவு செய்யவில்லை. அந்த முடிவை நோக்கி தள்ளப்பட்டேன் என்றுதான் கூறவேண்டும். இந்த விசயத்தை மிகவும் அந்தரங்கமாக வைத்துகொள்ளவே நினைத்தேன். எனது முன்னாள் மனைவிக்கும் இது மூலம் எந்த பாதிப்பும் ஏற்பட கூடாது என்றும் தான் நினைத்தேன்.

நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள இன்ஸ்டா பதிவு:

ஆனால், நான் அமைதியாக இருப்பதான் என்மீது பல பழிகள் விழுகிறது. ஒரு தந்தையாக எனது கடமையை செய்யவில்லை என்று என்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்த குற்றச்சாட்டுகளை நான் முழுவதுமாக மறுக்கிறேன். நான் உண்மையை எப்போதும் நம்புகிறேன். அதற்கி சரியான நீதி கிடைக்கும் வரை காத்திருப்பேன்.

இதில் எனக்கு மிகவும் வருத்தமான விசயம் என்ன என்றால். என் குழந்தைகளை அனுதாபத்திற்காக பயண்படுத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் குழந்தைகளை நான் எப்போதும் விட்டுகொடுத்ததில்லை. விட்டுகொடுக்கவும் மாட்டேன். அப்பாவாக என்ன செய்யவேண்டுமோ அதை உடல் நீதியாகவும் மன ரீதியாகவும் எப்பவும் கொடுப்பேன் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.