பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்… அவர் ஒரு போராளி – நடிகர் ரஜினிகாந்த்

Actor Rajinikanth About PM Narendra Modi: மும்பையில் இன்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு நடைப்பெற்ற WAVES 2025 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் நரேந்திர மோடி ஒரு போராளி என்றும் அவர்  மீண்டும் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவார்... அவர் ஒரு போராளி - நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் நரேந்திர மோடி

Published: 

01 May 2025 17:04 PM

நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) நடிப்பில் இறுதியாக வேட்டையன் படம் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களான நடிகர் நாகர்ஜுனா, நடிகர் உபேந்திரா, நடிகர் சௌபின் சாஹிர், நடிகர் சத்யராஜ், நடிகை ஸ்ருதி ஹாசன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. மேலும் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

கூலி படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு சற்றும் ஓய்வு இல்லாமல் அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த். அதன்படி நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்தப் படத்தின் அறிவிப்பு கூலி படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பாகவே வெளியானது. ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிக கவனத்தைப் பெற்றது. இந்த நிலையில் இன்று மும்பையில் நடைப்பெற்ற WAVES 2025 நிகழ்ச்சியில் தனது இரண்டாவது மகள் சௌந்தர்யாவுடன் ரஜினிகாந்த் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கோலிவுட், பாலிவுட், மோலிவுட், டோலிவுட் என அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேசியதாவது, பொழுதுபோக்கு விஷயத்தில் கவனம் செலுத்துவதால், “தேவையற்ற விமர்சனங்கள்” காரணமாக அரசாங்கம் நான்கு நாள் நிகழ்வை ஒத்திவைக்கக்கூடும் என்று சிலர் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

மும்பையில் நடந்த WAVES 2025 நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினிகாந்த்:

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி மீது எனக்குள்ள நம்பிக்கையின் காரணமாக இந்த நிகழ்வு நிச்சயமாக நடக்கும் என்று நான் நம்பிக்கையுடன் இருந்தேன். பிரதமர் மோடி ஒரு போராளி. அவர் எந்த சவாலையும் சந்திப்பார். அவர் அதை நிரூபித்துள்ளார், கடந்த பத்தாண்டுகளில் நாம் அதைக் காண்கிறோம், என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பஹல்காமில் நடந்த காட்டுமிராண்டித்தனமான மற்றும் இரக்கமற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் நடிகர் ரஜினிகந்த் பேசியுள்ளார். காஷ்மீர் நிலைமையை பிரதமர் மோடி தைரியமாகவும் அழகாகவும் கையாள்வார் என்று தான் உறுதியாக நம்புவதாக ரஜினிகாந்த் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.