ஹிட் 3 படத்தின் வெற்றி… நடிகர் நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

Actor Nani: தென்னிந்திய ரசிகர்களால் நேச்சுரல் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்படும் நடிகர் நானியின் நடிப்பில் இன்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ஹிட் 3. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து நடிகர் நானி வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகின்றது.

ஹிட் 3 படத்தின் வெற்றி... நடிகர் நானி வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் நானி

Published: 

01 May 2025 18:11 PM

நடிகர் நானியின் (Actor Nani) நடிப்பில் இறுதியாக தெலுங்கில் வெளியான படம் சரிபோதா சனிவாரம். இந்தப் படம் தெலுங்கு மொழி ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிதிய ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் நானி இயக்குநர் சைலேஷ் கொலானு (Director Sailesh Kolanu) உடன் கூட்டணி வைத்தா. அதன்படி இயக்குநர் சைலேஷ் கொலானு எழுதி இயக்கியுள்ள ஹிட் 3 படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் விஷ்வக் சென், விஜய் சேதுபதி, அதிவி சேஷ், சூர்யா ஸ்ரீனிவாஸ், ராவ் ரமேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் புரமோஷன்களில் நடிகர் நானி பேசியது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இன்று மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரயரங்குகளில் நானியின் ஹிட் 3 படம் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதைப் பார்த்த நடிகர் நானி தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நடிகர் நானி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அதில், நடிகர் நானி ஒரு போஸ்டரைப் பகிர்ந்துகொண்டு, இந்த மே மாதம் BOXOFFICE-ல் மேஹெம் ஆகட்டும். நான் உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். இன்று அர்ஜுன் சர்க்காரின் முறை. இது உண்மையிலேயே மறக்கமுடியாதது என்று அந்த எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மேலும் ரசிகர் ஒருவர் எழுதிய எக்ஸ் தள பதிவில் இன்று ஹிட் 3 படம் பார்த்தேன், நடிகர்கள் நானி மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டியின் கெமிஸ்ட்ரி வாவ் என்று தெரிவித்திருந்தார். மற்றொருவர் எழுதிய எக்ஸ் தள பதிவில் ஹிட் படத்தின் 4வது பாகத்திற்காகக் காத்திருக்கிறேன். இந்த ஹிட் 3 ஒரு சூப்பர் ஹிட் படம் என்றும் தெரிவித்திருந்தார்.

சைலேஷ் கொலானு இயக்கிய இந்தப் படத்திற்கான ஆரம்பகால விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன, நானியின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வரும் நிலையில், இந்த த்ரில்லர் படம் யூகிக்கக்கூடியதாகவே உள்ளது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.