Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Dhanush : அருண் விஜயின் “ரெட்ட தல” படத்தில் தனுஷ் செய்யும் சம்பவம்.. என்ன தெரியுமா?

Retta Thala Movie Update : சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய். இவரின் நடிப்பில் வெளியான வணங்கான் படத்தைத் தொடர்ந்து, தற்போது ரெட்ட தல என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றைப் படவுள்ளதாகத் தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து விவரங்களைப் பார்க்கலாம்.

Dhanush : அருண் விஜயின் “ரெட்ட தல” படத்தில் தனுஷ் செய்யும் சம்பவம்.. என்ன தெரியுமா?
அருண் விஜய் மற்றும் தனுஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 07 Apr 2025 19:53 PM

தமிழில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அருண் விஜய் (Arun Vijay). இவர் தற்போது ரெட்ட தல மற்றும் பார்டர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிகர் தனுஷின் இயக்கத்தில் உருவாகிவரும் இட்லி கடை (Idly Kadai) படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவர் பாக்சிங் உடையணிந்திருந்த போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வந்தது. இதில் தனுஷிற்கு (Dhanush) அடுத்த லீட் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. நடிகர் அருண் விஜயின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் வணங்கான் (Vanangaan). இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளியான இப்படம், மக்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதைத் தொடர்ந்து 3 படங்களில் தொடர்ந்து கமிட்டானார். இதில் இட்லி கடை மற்றும் ரெட்ட தல படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் பார்டர் படமானது ப்ரீ ப்ரொடக்ஷ்ன் பணியில் இருந்து வருகிறது.

அறிமுக இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் (Chris Thirukumaran) இயக்கத்தில் உருவாகிவரும் ரெட்ட தல படத்திலிருந்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் நடிகர் தனுஷ் பாடல் ஒன்றை பாடவுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. மேலும் நடிகர் அருண் விஜய் வெளியிட்ட பதிவும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து ரெட்ட தல படத்தில் தனுஷ் பாடவுள்ளாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

நடிகர் அருண் விஜய் வெளியிட்ட பதிவு :

இட்லி கடை படத்தைத் தொடர்ந்து, நடிகர் அருண் விஜய்யின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் படம் ரெட்ட தல. இந்த படத்தை இயக்குநர் கிறிஸ் திருக்குமரன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் அறிவிப்புகளானது 2024, ஆண்டு தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் A36 என்று அறிவிக்கப்பட்ட இப்படத்தின் டைட்டிலும், அதைத் தொடர்ந்து வெளியாகியது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக, நடிகை ஷித்தி இட்னானி நடித்து வருகிறார்.

இவர் சிம்புவின் வெந்துதணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களுடன் தன்யா ரவிசந்திரன், ஹரீஷ் பேரடி, யோக ஜாபி, வின்சென்ட் அசோகன், ஜான் விஜய் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான BTG யுனிவர்சல் தயாரித்து வருகிறது. இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைக்களத்துடன் உருவாகி வருகிறது. இந்த இப்படத்தில் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்து வருகிறார். இவரின் இசையமைப்பில்தான் இப்படத்தில், ஒரு பாடலை நடிகர் தனுஷ் பாடவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை குறித்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.