Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Good Bad Ugly : அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது..? அதிகாலை காட்சிகள் கிடையாதா?

Good Bad Ugly First Show Update : அஜித் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் கூட்டணியில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படமானது வரும், 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் முதல் காட்சிகள் எப்போது வெளியாகிறது என்பது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

Good Bad Ugly : அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் முதல் காட்சி எப்போது..? அதிகாலை காட்சிகள் கிடையாதா?
குட் பேட் அக்லிImage Source: Social media
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Apr 2025 19:30 PM

கோலிவுட் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக நடிப்பில் கலக்கி வருபவர் அஜித் குமார் (Ajith Kumar) . இவர் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து கார் ரேஸிலும் அசத்தி வருகிறார். அப்படியாக தற்போது இவரின் முன்னணி நடிப்பில் குட் பேட் அக்லி (Good Bad Ugly ) திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை மார் ஆண்டனி படத்தை இயக்கிய, ஆதிக் ரவிசந்திரன் (Adhik Ravichandran)  இயக்கியுள்ளார். இவரின் முன்னணி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித் குமார் ஆக்ஷ்ன் கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் முன்னணி நடிப்பில் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் இவரும் இப்படத்தில் ஆக்ஷ்ன் நாயகியாக நடித்துள்ளார். இந்த குட் பேட் அக்லி படமானது வரும், 2025, ஏப்ரல் 10ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

மேலும் தமிழகத்தில் இப்படமானது அதிகாலை காட்சிகள் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் , தற்போது ஏப்ரல் 10ம் தேதியில் காலை 9 மணி காட்சிகள் முதல் திரைப்படம் ரிலீசாகிறது என்று கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தில் அதிகாலை காட்சிகளானது தமிழகத்தில் மட்டும் ரத்து செய்யப்படவில்லை, கர்நாடகா மற்றும் கேரளாவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களிலும் காலை 9 மணி காட்சிகளுடன்  குட் பேட் அக்லி படமானது வெளியாகிறது. இந்த தகவலானது தினத்தந்தி இணையதளத்தில் பகிரப்பட்டுள்ளது

குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் :

அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் ப்ரீ புக்கிங் தற்போது சிறப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில், ப்ரீ புக்கிங் கடந்த 2025, ஏப்ரல் 4ம் தேதியில் இரவி 8:02 முதல் தொடங்கியது. தற்போதுவரை பல லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையானதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நிகழ்ச்சிகள் போல் இல்லாமல், போஸ்டர்கள், பேருந்துகளில் ஸ்டிக்கர்கள் என ப்ரோமோஷன் செய்யப்பட்டு வருகிறது.

ஏனென்றால் பொதுவாக நடிகர் அஜித் குமார் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது இப்படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ளது. இப்படமானது வரும் 2025, ஏப்ரல் 10ம் தேதியில், வியாழக்கிழமை அன்று வெளியாகிறது.

குட் பேட் அக்லி ட்ரெய்லர் சாதனை :

இந்த குட் பேட் அக்லி படத்தில் அஜித்துடன், த்ரிஷா கிருஷ்ணன், சிம்ரன், அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரபு, யோகி பாபு மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இரண்டு  நாட்களை கடந்த நிலையில், இதுவரை சுமார் 38 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி வசூலை வாரிக் கொட்டும் என்பது உறுதியாகியுள்ளது.