தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!

Romantic Movies in Tamil Cinema: தமிழ் சினிமாவில் உணர்வுகளை மையமாக வைத்து பல படங்கள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இதுவரை முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ரொமாண்டிக் படங்களில் பெஸ்ட் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தமிழில் வெளியான பெஸ்ட் ரொமாண்டிக் படங்களின் லிஸ்ட் இதோ!

படங்கள்

Published: 

15 May 2025 22:10 PM

அலைபாயுதே: இயக்குநர் மணிரத்னம் (Director Maniratnam) இயக்கத்தில் 2000-ம் ஆண்டு வெளியான படம் அலைபாயுதே. இந்தப் படத்தில் நடிகர் மாதவன் நாயகியாகவும் நடிகை ஷாலினி நாயகியாகவும் நடித்து இருந்தார்கள். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. வீட்டிற்கு தெரியாம காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள் நடிகர்கள் மாதவன் மற்றும் ஷாலினி. பிறகு வீட்டிற்கு தெரியவந்ததும் அவர்கள் தனியா வாழத் தொடங்குவார்கள். இந்த ரொமாண்டிக் படம் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் வெளியான போது காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு காதல் சின்னமாக இந்தப் படம் அமைந்தது என்பது நிதர்சனமான உண்மை. இந்தப் படம் தொலைக்காட்சியில் தற்போது வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணைத்தாண்டி வருவாயா: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படத்தில் நடிகர் சிலம்பரசன் நாயகனாகவும், நடிகை த்ரிஷா கிருஷ்ணன் நாயகியாக நடித்திருந்தார். வயது வித்யாசம் உள்ள இருவருக்கு இடையே வரும் காதல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

பம்பாய்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் 1995-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது பம்பாய் படம். இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நாயகனாகவும் நடிகை மனிஷா கொய்ராலா நாயகியாகவும் நடித்து இருந்தார். மாற்று மதத்தினர் இருவர் காதலித்து திருமணம் செய்வதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகி இருந்தது. இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாரணம் ஆயிரம்: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் வாரணம் ஆயிரம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்திருந்தார். நடிகைகள் சிம்ரன், சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா ஆகியோர் நாயகிகளாக நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் சூர்யா அப்பா மகன் என்று இரட்டை வேடங்களில் நடித்து அசத்தி இருப்பார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த பாடல்கள் அனைத்தும் தற்போதும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!