Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்வீடியோ

RBI : மே 31-க்குள் வங்கி கணக்கில் இவ்வளவு தொகை இருக்க வேண்டும்.. ஆர்பிஐ எச்சரிக்கை.. யார் யாருக்கு?

Reserve Bank of India Mandate New Rules | இந்திய ரிசர்வ் வங்கி, வங்கி சார்ந்த முக்கிய விதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், மே 31, 2025-க்குள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வரவு வைக்கவில்லை என்றால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

RBI : மே 31-க்குள் வங்கி கணக்கில் இவ்வளவு தொகை இருக்க வேண்டும்.. ஆர்பிஐ எச்சரிக்கை.. யார் யாருக்கு?
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 11 May 2025 12:58 PM

இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் வங்கி கணக்குகளை (Bank Accounts) பயன்படுத்துகின்றனர். பணத்தை டெபாசிட் செய்வது. பண பரிவர்த்தனை மேற்கொள்வது உள்ளிட்ட சேவைகளுக்கு வங்கி கணக்கு முக்கியமாக உள்ளது. முன்பெல்லாம் கையில் பணம் வைத்து செலவு செய்து வந்த நிலையில், தற்போது அனைத்தும் மாறிவிட்டது. தற்போதைய காலக்கட்டத்தில் வங்கி கணக்குகள் இல்லையென்றால் பண பரிவர்த்தனைகள் செய்ய முடியாது என்ற சூழலில் பெரும்பாலான பொதுமக்கள் வங்கி கணக்குகளை பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தான் வங்கி கணக்கு குறித்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி கூறிவது என்ன?

அதாவது மே 31, 2025-க்குள் வங்கி கணக்கில் குறிப்பிட்ட தொகையை வரவு வைக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அவ்வாறு வரவு வைக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. இந்த நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த புதிய அறிவிப்பு யார் யாருக்கு பொருந்தும், அவ்வாறு வங்கி கணக்கில் பணம் வரவு வைக்காதவர்களுக்கு என்ன தண்டனை வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆர்பிஐ-ன் விதிகள் யார் யாருக்கு பொருந்தும்?

வாடிக்கையாளர்கள் சிலர் தங்களது வங்கி கணக்கில் ரூ.436 வரவு வைக்கவில்லை என்றால் பெரிய சிக்கலை சந்திக்க நேரிடும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. அதாவது பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா (Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana) திட்டத்தில் முதலீடு செய்துள்ள நபர்கள் கட்டாயம் தங்களது வங்கி கணக்கில் ரூ.436 வைத்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. இந்த நிலையில், மே 31, 2025-க்கு வங்கி கணக்கில் இந்த தொகையை வரவு வைக்கவில்லை என்றால் பாலிசி தானாகவே ரத்து செய்யப்படும். எனவே, இந்த திட்டத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் இந்த தொகையை செலுத்த வேண்டியது கட்டாயமாக உள்ளது.

ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் என்றால் என்ன?

ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டம் அரசு செயல்படுத்தும் திட்டங்களில் ஒன்றாகும். இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.436 செலுத்தி ரூ.2 லட்சம் வரை ஆயுள் காப்பீடு பெறலாம். இந்த திட்டத்திற்கான பிரீமியம் தொகை செலுத்துவது தொடர்பாக தான் இந்திய ரிசர்வ் வங்கி தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!
விராட் கோலி இடத்தில் யார் இறங்குவார்கள்..? ஓபனாக சொன்ன பண்ட்!...
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்..
தமிழக மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்.....
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!
இனி ஏடிஎம் மையங்களில் ரூ.100, ரூ.200 தான் அதிகம் இருக்கும்!...
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ பண்ணும் பாலிவுட் நடிகர்?...
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது..
கோவை வெடி விபத்து.. என்.ஐ.ஏ நடத்திய விசாரணையில் 4 பேர் கைது.....
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!
கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்? எச்சரிக்கை..!...
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
கீழடி அகழ்வாராய்ச்சி - தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!
சுறாவிடம் சிக்கும் 5 பேர்... ஓடிடியில் காண வேண்டிய படம்!...
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!
இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை - பொதுமக்கள் பாதிப்பு!...
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!
சென்னை கடற்கரை - திருவண்ணாமலை இடையே பயணிகள் ரயில் ரத்து!...
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்
அரசுப்பள்ளிக்கு பேருந்து நன்கொடை கொடுத்த கிராம மக்கள்...