பிபிஎஃப் கணக்கு தொடங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க! | TV9 Tamil News

பிபிஎஃப் கணக்கு தொடங்க போறீங்களா?.. அதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!

Updated On: 

01 Mar 2026 21:42 PM

 IST

Do Not Do This Mistake In PPF | இந்தியாவில் அதிக லாபம் தரக்கூடிய பாதுகாப்பான முதலீட்டு திட்டமாக பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. இந்த நிலையில், பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யும்போது செய்யக்கூடாத தவறுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5பாதுகாப்பான முதலீடு, சிறந்த வட்டி மற்றும் வரி விலக்கு என பல்வேறு அசத்தல் அம்சங்களை கொண்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் பலருக்கும் பிடித்த முதலீடாக உள்ளது. ஆனால், பிபிஎஃப் திட்டத்தில் செய்ய கூடாத சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை என்ன என தெரிந்துக்கொண்டு பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். 

பாதுகாப்பான முதலீடு, சிறந்த வட்டி மற்றும் வரி விலக்கு என பல்வேறு அசத்தல் அம்சங்களை கொண்ட பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான் பலருக்கும் பிடித்த முதலீடாக உள்ளது. ஆனால், பிபிஎஃப் திட்டத்தில் செய்ய கூடாத சில முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை என்ன என தெரிந்துக்கொண்டு பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். 

2 / 5

பிபிஎஃப் திட்டத்தை பொருத்தவரை ஒருவரால் ஒரு கணக்கை மட்டுமே திறக்க முடியும். இன்னொரு வங்கியில், இன்னொரு கணக்கு தொடங்கி அதில் பிபிஎஃப் முதலீடு செய்யலாம் என நினைத்தால் அது முற்றிலும் தவறானது. காரணம் அவ்வாறு நீங்கள் தொடங்கும் இரண்டாவது முதலீட்டுக்கு வட்டி வழங்கப்படாது. 

3 / 5

ஒருவேளை தெரியாமல் பிபிஎஃப் கணக்கு தொடங்கினால் அது விதிகளுக்கு புறம்பானதாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தில் மற்ற முதலீட்டு திட்டங்களை போல கூட்டாகவும் கணக்கு தொடங்க முடியாது. உங்கள் பிபிஎஃப் கணக்குடன் பான் கார்டு இணைக்கப்படுவதால் நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிபிஎஃப் கணக்கு வைத்திருந்தால் தணிக்கையின் போது அது எளிதாக தெரிய வந்துவிடும். 

4 / 5

ஒருவேளை ஒருவர் விதியை மீறி இரண்டு பிபிஎஃப் கணக்கு வைத்துள்ளார் என்றால் அவரிடம் இருக்கும் இரண்டாவது கணக்கு செல்லாததாக அறிவிக்கப்படும். அந்த கணக்கில் நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு வட்டி வழங்கப்படாமல் நீங்கள் முதலீடு செய்த அசல் தொகை மட்டும் உங்களுக்கு திருப்பி வழங்கப்படும். 

5 / 5

நீங்கள் பாதுகாவலராக ஒரு மைனர் குழந்தை அல்லது மனநலன் குன்றியவரின் பெயரில் கணக்கு தொடங்கலாம். ஆனால், ஒரு குழந்தையின் பெயரில் ஒரு கணக்கு மட்டுமே இருக்க வேண்டும். எனவே நீங்கள் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்னதாக இவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. 

Follow Us