ஆதாரின் புதிய விதிமுறை: பெயர், பிறந்த தேதி, முகவரியை எத்தனை முறை மாற்றலாம்?
Aadhaar Update Rules : ஆதார் அட்டையில் தவறான தகவல்கள் இருந்தால் முக்கிய சேவைகளில் தடை ஏற்படலாம். மொபைல் எண், பெயர், பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை எவ்வளவு முறை அப்டேட் செய்யலாம் என்பது குறித்து UIDAI தெளிவான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

மாதிரி புகைப்படம்
ஆதார் கார்டு(Aadhaar) என்பது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கான மிக முக்கியமான அடையாள ஆவணமாகும். பள்ளி சேர்க்கை முதல் வங்கிக் கணக்கு திறப்பது வரை அனைத்து முக்கிய சேவைகளுக்கும் ஆதார் அவசியமாகும். எனவே ஆதார் கார்டில் தவறான தகவல் இருந்தால் அதனால் பெரும் பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும். உடனடியாக அதனை மாற்றிக்கொள்வது அவசியம். இத்தகைய நிலைமைகளைத் தவிர்க்க, யுஐடிஏஐ (UIDAI) இணையதளத்தின் மூலமாகவோ அல்லது இசேவை மையங்களின் மூலமாகவோ உங்கள் தகவல்களை சரிசெய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால், சில தகவல்களை பொறுத்த வரை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ள முடியாது. அது குறித்து இந்த கட்டுரையில் விரவாக பார்க்கலாம்.
ஆதாரில் என்னென்ன தகவல்களை எத்தனை முறை மாற்றலாம்?
- தாங்கள் பயன்படுத்தும் மொபைல் எண்ணை மாற்ற விரும்பினால் அல்லது தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றால், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். யுஐடிஏஐ இதற்கெதிராக எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கவில்லை.
- பெயர் மாற்றம் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே பெயரை மாற்ற அனுமதி அளிக்கப்படுகிறது. அதனால், மாற்றம் செய்வதற்கு முன் உங்கள் பெயரை சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்யுங்கள். இதற்கு ஆதாரமாக பான் கார்டு, பாஸ்போர்ட், திருமண சான்றிதழ் போன்றவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஆதாரில் பிறந்த தேதியை ஒரே முறை மட்டுமே மாற்ற முடியும். பிறந்த சான்றிதழ் அல்லது கல்வி சான்றிதழ்கள் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- இடம் மாறினால் அல்லது நிரந்தர முகவரி மாறினால், ஆதாரில் முகவரியை பல முறை மாற்ற அனுமதி உள்ளது. மின் கட்டண ரசீது, வாடகை ஒப்பந்தம், வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் அப்டேட் செய்யக்கூடியவை
-
பெயர்
-
பிறந்த தேதி
-
முகவரி
-
பாலினம்
ஆதார் சேவை மையத்தில் மட்டுமே மாற்றக்கூடியவை
-
பயோமெட்ரிக் விவரங்கள் (விரல் ரேகை, கண் விவரம்)
-
மொபைல் எண்
ஆதார் மையத்துக்குச் செல்லும்போது சரியான ஒரிஜினல் ஆவணங்களை எடுத்துச் செல்லுங்கள். அப்டேட் செய்யும் முன் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என சரிபார்க்கவும். மொபைல் எண் பதிவு செய்யும் போது அதனை ஓடிடி மூலம் மாற்றிக்கொள்ளலாம். இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம், உங்கள் ஆதார் விவரங்கள் எப்போதும் சரியாக இருக்கும். இதனால் எதிர்காலத்தில் எந்தவிதமான சேவை தடைகளும் ஏற்படாமல் இருக்க உதவும்.