Viral Video : தாஜ்மஹாலின் இந்த அழகை யாரும் பார்த்திருக்க முடியாது.. சுற்றுலா பயணி பகிர்ந்த அழகிய வீடியோ!

Crow Free Photos and Video of Taj Mahal Goes Viral | தாஜ்மஹால் உலக அளவில் மிகவும் பிரபலாமக உள்ளதால் அதனை காண உலக அளவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். இதன் காரணமாக தாஜ்மஹால் எப்போது கூட்ட நெரிசலுடன் காணப்படும். ஆனால் பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத தாஜ் மஹாலை படம் பிடித்துள்ளார்.

Viral Video : தாஜ்மஹாலின் இந்த அழகை யாரும் பார்த்திருக்க முடியாது.. சுற்றுலா பயணி பகிர்ந்த அழகிய வீடியோ!

வைரல் வீடியோ

Published: 

11 May 2025 19:21 PM

இந்தியாவின் அடையாள சின்னமாக விளங்குவது தான் தாஜ்மஹால். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா வரும் நபர்கள் தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்தியாவுக்கு வருவர். அந்த அளவிற்கு உலகமும் முழுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக தாஜ்மஹால் உள்ளது. தாஜ்மஹால் உலகம் முழுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ள நிலையில் அங்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அலைமோதும். இதனால் அங்கு புகைப்படம் எடுத்தால் கூட அதில் தாஜ்மஹாலை விட அங்கிருக்கும் மக்கள் கூட்டம் தான் தெரியும். ஆனால், பிரிட்டிஷ் சுற்றுலா பயணி ஒருவர் தாஜ்மஹாலை இதுவரை யாரும் பார்த்திரா வகையில் கூட்டமே இல்லாமல் கண்டு ரசித்துள்ளார். அதனை அவர் வீடியொ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாருமே பார்த்திராத தாஜ்மஹாலின் அழகை கண்டு ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி

இங்கிலாந்தை சேர்ந்த கிறிஸ்டா ஜர்மன் என்ற அந்த பெண் தாஜ்மஹாலை சுற்றி பார்ப்பதற்காகவும் அங்கு யாருமே இல்லாதபோது புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிகாலை 4.45 மணிக்கு தாஜ்மஹாலுக்குள் நுழைந்துள்ளார். அப்போது அவர் பல அதிசயங்களை கண்டுள்ளார். அதாவது கூட்ட நெரிசல் இல்லாத, மயில், பறவைகள் மிகுந்த அழகிய மற்றும் தனிமையான தாஜ்மஹாலை அவர் கண்டு ரசித்துள்ளார். அதுமட்டுமன்றி அவர் அங்கு சில அற்புதமான புகைப்படங்களையும் எடுத்துள்ளார். தாஜ்மஹாலில் மயில்கள், குயில்கள் சத்தத்தோடு விடிந்த அந்த காலை பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது. இந்த வீடியோ அந்த பெண் இணையத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

தாஜ்மஹாலின் இந்த அழகை யாரும் பார்த்திருக்க முடியாது – வைரல் வீடியோ

வைரல் வீடியோவுக்கு குவியும் நெட்டிசன்களின் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தாஜ்மஹால் இவ்வளவு அழகாக இருக்கும் என்பதை தான் இப்போது தான் பார்ப்பதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இது தாஜ்மஹாலா அல்லது சொர்க்கமா என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் வியந்து தங்களது கருத்துக்களை அந்த வீடியோவின் கீழ் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.