Viral Video : தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!

Man Risks Life By Saving Drowning Dog | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வகையில், நீரில் மூழ்கி உயிருக்கு போராடும் நாயை ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. அ

Viral Video : தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிய நாய்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய நபர்!

வைரல் வீடியோ

Updated On: 

06 Jun 2025 18:17 PM

சக உயிர்கள் மீது அன்பு செலுத்துவது என்பது குறைந்துக்கொண்டே வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு மனிதர்கள் உதவி செய்வதே குறைந்து வரும் நிலையில், ஒரு நபர் தண்ணீரில் மூழ்கும் நாயை தனது உயிரை பணயம் வைத்து காப்பாற்றியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகிறது. தனது உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த நபர் செய்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உயிரை பணயம் வைத்து நாயை காப்பாற்றிய நபர்

சமூக ஊடகங்களின் உதவியால் உலகில் எந்த மூலையில் அசாத்தியமான மற்றும் ஆச்சர்யமான விஷயங்கள் நடந்தாலும் அது குறித்து உலகிற்கு மிக விரைவில் தெரிய வந்துவிடும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் இணையத்தில் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், ஒருவரை தனது உயிரை பணயம் வைத்து தண்ணீரில் மூழ்கும் நாயை காப்பாற்றும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் மழையால் ஏற்பட்ட சிக்கிக்கொண்ட நாய் ஒன்று தண்ணீரில் அடித்துச் செல்லப்படுகிறது. அது பார்ப்பதற்கே மிகவும் ஆபத்தானதாக தோன்றுகிறது. இந்த நிலையில், நாய் உயிருக்கு போராடுவதை கண்ட அங்கிருந்த நபர் ஒருவர் உடனடியாக தண்ணீரில் குதித்து நாயை காப்பாற்ற முயற்சி செய்கிறார். கழுத்தளவு இருக்கும் தண்ணீரில் நீந்தி செல்லும் அந்த நபர் போராடி நாயை மீட்கிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை பார்க்கும்போது மனிதம் இன்றும் உயிரிப்புடன் இருப்பதை தான் உணர்வதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் வியந்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.