Viral Video : அரசு பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்த ஓட்டுநர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

Bus Driver Stops Bus for Namaz | இணையத்தில் ஒவ்வொரு நாளும் சில வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகையில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : அரசு பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்த ஓட்டுநர்.. சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

01 May 2025 16:21 PM

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் மீது மரபுகள் மீது அதீத பெற்று கொண்டவர்களாக இருப்பபர். எந்த வேலையாக இருந்தாலும், தொழுகை செய்வதை தவறாமல் கடைபிடிப்பர். இஸ்லாமியர்கள் ஒரு நாளைக்கு 5 வேலை தொழுக வேண்டிடும் என்ற நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கும் செல்லும் நபர்கள் குறைந்தபட்சம் வெள்ளி கிழமைகளிலாவது தொழுகை செய்வர். இந்த நிலையில், அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை நிறுத்தி வைத்துவிட்டு தொழுகை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தை நிறுத்தி தொழுகை செய்த ஓட்டுநர் – சர்ச்சையை ஏற்படுத்தி விவகாரம்

கர்நாடகை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஒருவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டிச் சென்ற நிலையில், திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகையில் ஈடுபட்டுள்ளார். அவர் தொழுகை செய்ததை பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை நிறுத்திவிட்டு தொழுகை செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தனிநபரின் தேவைக்காக பொதுமக்கள் பயணிக்கும் அரசு பேருந்தை நிறுத்துவது மிகவும் தவறானது என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இது சட்டத்திற்கு புறம்பானது, இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். அந்த பேருந்து ஓட்டுநரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார். ஆனால் சிலர், அந்த நபர் மீது வெறுப்பை விதைக்க வேண்டாம் என்றும் அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.