Viral Video : திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய கூட்டம்!

Bull Interrupts Dance Performance | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில் காளை மாடு ஒன்று மேடை மீது துள்ளி குதித்து அங்கிருக்கும் நபர்களை முட்டி தள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : திடீரென நடன மேடையில் பாய்ந்த காளை.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய கூட்டம்!

வைரல் வீடியோ

Published: 

18 May 2025 19:22 PM

ஸ்மார்ட்போன்கள் (Smartphone) மற்றும் சமூக ஊடகங்களில் (Social Medias) உதவியால் உலகில் எந்த மூலையில் ஏதேனும் அசத்தியமான மற்றும் ஆச்சர்யமான நிகழ்வுகள் நடந்தாலும் அது மிக எளிதாக உலகிற்கு தெரிய வந்துவிடும். அந்த வகையில், விழாவில் மேடையில் நடனமாடி கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் காளை புகுந்த அட்டகாசம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ, இணையத்தில் பதிவிடப்பட்டது முதலே மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேடை மீது ஏறி அட்டகாசம் செய்த காளை

இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், தற்போது இணையத்தில் காளை ஒன்று விழா மேடையின் மீது ஏறி அட்டகாசம் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ அதிர்ச்சியையும் அதே நேரத்தில் சிரிப்பையும் ஏற்படுத்தும் விதமாக உள்ளதால் அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ஏதோ ஒரு நிகழ்ச்சியில் சிலர் மேடை அமைத்து நடனமாடிக்கொண்டு இருக்கின்றனர். அனைவரும் பாடல்கள் போட்டு உற்சாகமாக நடனமாடி கொண்டிருக்கின்றனர். அந்த இடத்தில் மேடைக்கு கீழே காளை ஒன்று நின்றுக்கொண்டு இருக்கிறது. அப்போது அது திடீரென மேடையின் மீது துள்ளி குதித்து அங்கு நடனமாடிக்கொண்டு இருந்தவர்களை முட்டி தள்ளுகிறது. காளை மேடையின் மீது ஏறியதை கண்ட கூட்டம் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடுகிறது. இவை அனைத்தும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

மனிதர்கள் மட்டும்தான் அனைத்து சந்தோஷங்களையும் அனுபவிக்க வேண்டுமா என்ற ஆத்திரத்தில் அந்த காளை மேடை மீது குதித்ததாக ஒருவர் பதிவிட்டுள்ளார். மாடுகளுக்கும் நடனமாட பிடிக்கும் என்பது இப்போதுதான் எனக்கு தெரியும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இவ்வாறு பலரும் தங்களது கருத்துக்களை நகைச்சுவையாக பதிவிட்டு வருகின்றனர்.