அடிபட்ட நாயை சிகிச்சைக்கு அழைத்துச் சென்ற சிறுவர்கள்.. இணையத்தை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய வீடியோ!
Kids Taking Dog to Hospital | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வரும். அந்த வகையில் சிறுவர்கள் இருவர் காயமடைந்த நாயை சிகிச்சை அழைத்துச் செல்லும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இது தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

வைரல் வீடியோ
பொதுவாக செல்லப்பிராணிகள் என்றால் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக நாய்கள் என்றால் ஒரு படி மேலே அதிகம் பாசம் காட்டுவார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நாய்களுக்கும், மனிதர்களுக்கும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. நாய்கள் செல்லப்பிராணிகளாக மட்டும் இருப்பதன்றி அவை மனிதர்களின் உற்ற தோழனாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றன. தனிமையில் இருக்கும் பெரும்பாலான மனிதர்கள் தங்களுக்கு துணையாக நாயை தேர்வு செய்கின்றனர். இதன் காரணமாக மிகப்பெரிய பணக்காரர்கள் முதல் சாதாரன குடும்பத்தில் இருப்பவர்கள் வரை பலரும் நாய்களை வளர்க்கின்றனர்.
நாய்களுக்கு மனிதர்களுக்கும் இருக்கும் பிரிக்க முடியாத பந்தம்
நாய்கள் மீது அதிக பற்று கொண்டிருக்கும் உரிமையாளர்கள் சிலர் அவற்றை தங்களது உடன் பிறந்தவர்களை போலவும், தங்களது குழந்தைகளை போலவும் பராமரித்து வருகின்றனர். நாய்களுக்கென தனி அரை, அவற்றுக்கான பிரத்யேக உணவுகள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றன. இந்த நிலையில், தங்களது செல்லப்பிராணியான நாயை காப்பாற்ற சிறுவர்கள் இருவர் செய்த செயல் கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பதிவிடப்பட்ட நிலையில், அது மிக வேகமாக வைரலாகி வருகிறது.
கவனத்தை ஈர்த்த சிறுவர்கள் – இணையத்தில் வைரலாகும் வீடியோ
இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் சிறுவர்கள் இருவர் காயமடைந்த தங்களது நாய்க்கு சிகிச்சை அளிக்க இரும்பு பெட்டியிலான ட்ராலியில் வைத்து அழைத்துச் செல்கின்றனர். அந்த சிறுவர்களிடம் எந்த பணமோ, வாகனமோ இல்லை. மாறாக அவர்கள் தங்கள் செல்லப்பிராணி மீது கொண்ட அதீத அன்பின் காரணமாக நாயை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு நடந்து செல்கின்றனர். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.
வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து
இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், பலரும் அது குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். போலியான உணகத்தில் இந்த நாய்க்கு உண்மையான உறவு கிடைத்துள்ளதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். இணையத்தில் வைரலாகும் மிக அழகான வீடியோ இதுதான் என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.