Viral Video : சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

Bull Riding Scooter Video Goes Viral | இணையத்தில் ஒவ்வொரு நாளும் பல வகையான வித்தியாசமான மற்றும் சுவாரஸ்யமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், மாடு ஒன்று ஸ்கூட்டர் ஓட்டிச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

Viral Video : சாலையில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற மாடு.. இணையத்தை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Updated On: 

04 May 2025 20:40 PM

பொதுவாக சென்னை உள்ளிட்ட நகர பகுதிகளில் மாடுகள் சாலையில் சுற்றித் திரிவது வழக்கமான நிகழ்வாக உள்ளது. அவ்வாறு சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் காய்கறி மற்றும் பழ கடைகளில் இருந்து பழங்களை சாப்பிடுவது, சுவற்றில் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர்களை சாப்பிடுவது உள்ளிட்ட செயல்களை செய்யும். சில சமயங்களில் சாலையில் செல்லும் பொதுமக்களை மாடுகள் தாக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகும். அந்த வகையில் தற்போது மாடு ஒன்று ஸ்கூட்டர் ஓட்டும் சிசிடிவி காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் எங்கு நடைபெற்றது, அந்த மாடு உண்மையிலே ஸ்கூட்டர் ஓட்டியதா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்ற மாடு

உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலம் ரிஷிகேஷ் (Rishikesh) பகுதியில் கருப்பு நிற மாடு ஒன்று சாலையில் சுற்றித் திரிந்துள்ளது. இந்த நிலையில், ஒரு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற ஸ்கூட்டரில் ஏறிய மாடு அதனை மிக வேகமாக தள்ளிச் செல்கிறது. மாடு தள்ளிய வேகத்தில் ஸ்கூட்டரின் ஸ்டாண்ட் எடுக்கப்பட்ட நிலையில், மாட்டின் வேகத்துடன் இணைந்து ஸ்கூட்டரும் ஓடியுள்ளது. பிறகு அந்த சாலையின் ஓரத்தில் இருந்த கட்டடத்தின் மீது ஸ்கூட்டர் மோதி நின்ற நிலையில், அந்த மாடு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இவை அனைத்தும் அந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது.

இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரல் வீடியோவுக்கு நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், அது குறித்து பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மாடுகளுக்கு இருசக்கார வாகனம் ஓட்ட தெரியும் என இப்போது தான் தனக்கு தெரிய வருவதாக ஒருவர் பதிவிட்டுள்ளார். மாடுகள் மனிதர்களை விட சிறப்பாக வாகனம் ஓட்டுகின்றன என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.