AI உதவியுடன் தனது பெயரைத் தேர்ந்தெடுத்த புதிய போப் – என்ன காரணம் தெரியுமா?
Pope’s AI Revelation : புதிய போப்பாகத் தேர்வாகியுள்ள ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட், தற்போது லியோ XIV என்ற பெயரில் பொறுப்பேற்றுள்ளார். கத்தோலிக்க திருச்சபையின் முதல் அமெரிக்கத் தலைவர் என்ற அடையாளத்துடன் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இவர், செயற்கை நுண்ணறிவின் (AI) உதவியுடன் தனது பெயரை மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Pope Leo XIII
போப் பிரான்சிஸ் (Pope Francis) கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று காலமானதைத் தொடர்ந்து, கத்தோலிக்க (Catholic) திருச்சபையின் புதிய தலைவராக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்த முதல் மதகுருவாக கத்தோலிக்க திருச்சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். போப்பாக தேர்ந்தெடுப்பவர்கள் தனது பெயரை மாற்றிக்கொள்வது வழக்கம். அந்த வகையில் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் 14 ஆம் லியோ போப் (Pope Leo XIII) என மாற்றிக்கொண்டார்.
இந்த நிலையில் தனது பெயரை 14 ஆம் லியோ லியோ என பெயரைத் தேர்ந்தெடுக்கும் பிரச்னையில் செயற்கை நுண்ணறிவை (Artificial Intelligence) பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதே சமயம், ஏஐ மனிதனின் பண்பாடு, தனித்துவம் மற்றும் பணியாளர்களின் உரிமைகள் போன்ற அடிப்படையான விஷயங்களில் பிரச்னையாக அமையும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
போப் லியோ XIV, தனது முதல் உரையில், தன் புதிய பெயரான ‘போப் லியோ XIV’ என்பது செயற்கை நுண்ணறிவுடன் பங்களிப்புடன் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார். மேலும்”நான் லியோ XIII என்பவரின் பாரம்பரியத்தை தொடர விரும்பினேன். அவர் 19ஆம் நூற்றாண்டின் முதல் தொழில்துறை புரட்சி காலத்தில் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடினார்.
இந்தப் பெயர், ஏஐ போன்ற தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் மனிதர்களின் பண்பாடு, தனித்துவம் மற்றும் நீதி காப்பாற்றுவதில் உள்ள சவால்களை புறக்கணிக்க முடியாது என்று அவர் கூறினார்.
ஏஐ மீதான விமர்சனம்
இதுகுறித்து போப் லியோ XIV பேசியதாவது, ஏஐ தொழில்நுட்பம் சமூகத்தின் தவறான பயன்பாடுகளை கண்காணிக்க சரியான நேரம் வந்துவிட்டது என்று வலியுறுத்தினார். அதாவது, இந்த புதிய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் தவறான தகவல்களை நம்புவதை மற்றும் அதை பரப்புவதன் மூலம் தமது தனித்தன்மையை இழக்கிறார்கள் என்று கூறினார். ஏஐ வழியில், தொழில்நுட்ப மேம்பாட்டின் அனைத்து நன்மைகளையும் பார்க்கும் அதே நேரம் மனித உரிமைகளுக்கான பாதுகாப்பையும் கவனிப்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், ஏஐ-யின் பாதிப்புகளை எதிர்கொள்வது தேவாலயத்தின் புதிய கடமை எனவும், ஏஐ மனிதர்களுக்கு உதவுவதாகவே இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்க தேவாலயத்தின் பதில்
ஏஐ வளர்ச்சியோடு தொடர்புடைய சமூக நலன்களை கண்காணிக்கவும், அதனால் ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்கவும், தேவாலயத்தின் சமூக கருத்துக்களை வழங்கவும் கத்தோலிக்க தேவாலயம் பணியாற்றும் என்று போப் லியோ XIV உறுதியாக கூறினார். அவர் கூறுவது போல, “உலகில் நடக்கும் தொழில்நுட்ப புரட்சி, குறிப்பாக ஏஐ மற்றும் அதன் சவால்களை எதிர்கொள்வது இப்போது தேவாலயத்தின் மிக முக்கிய கடமையாக உள்ளது என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.