புத்தாண்டு வாழ்த்து வடிவில் சைபர் கிரைம் மோசடி.. எச்சரிக்கும் காவல்துறை! | TV9 Tamil News

புத்தாண்டு வாழ்த்து வடிவில் சைபர் கிரைம் மோசடி.. எச்சரிக்கும் காவல்துறை!

Updated On: 

01 Jan 2026 02:55 AM

 IST

New Year Wish Scam | புத்தாண்டு தினத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து கூறிக்கொள்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், புத்தாண்டுக்கு கூறப்படும் இந்த வாழ்த்து மூலம் சைபர் கிரைம் மோசடி நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசர் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க எச்சரித்துள்ளனர்.

1 / 52025 இன்றுடன் (டிசம்ப்ர் 31, 2025) முடிவடைய உள்ள நிலையில், நாளை (ஜனவரி 01, 2026) 2026 ஆம் ஆண்டு அதாவது புத்தாண்டு தொடங்க உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வது வழக்கம். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் வாழ்த்து அனுப்புவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

2025 இன்றுடன் (டிசம்ப்ர் 31, 2025) முடிவடைய உள்ள நிலையில், நாளை (ஜனவரி 01, 2026) 2026 ஆம் ஆண்டு அதாவது புத்தாண்டு தொடங்க உள்ளது. புத்தாண்டை முன்னிட்டு ஒருவர் மற்றொருவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துக்கொள்வது வழக்கம். நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு வாட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் மூலம் வாழ்த்து அனுப்புவதை பலரும் வழக்கமாக கொண்டுள்ளனர். 

2 / 5

புத்தாண்டு தினத்தில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பிக்கொள்வது மிகவும் மகிழ்ச்சியன நிகழ்வாக இருந்தாலும், அதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் உருவாகியுள்ளது. அதாவது புத்தாண்டு வாழ்த்துக்கள் போர்வையில் சைபர் கிரைம் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் கூறியுள்ளனர். 

3 / 5

புத்தாண்டு தினத்தில் அதிகப்படியான சலுகைகள் மற்றும் வாழ்த்து செய்திகள் வரும் நிலையில், அதனை பயன்படுத்தி இந்த மோசடிகள் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த மோசடிகள் மூலம் பொதுமக்கள் தங்களது பணத்தை இழக்கும் ஆபத்து உள்ளதாகவும், அது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

4 / 5

புத்தாண்டு பண்டிகைக்காக நிறுவனங்கள் சில சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வழங்கும். இதற்காக பலரும் புத்தாண்டில் தங்களுக்கு தேவையான சில பொருட்களை வாங்குவதற்கு தயாராக இருப்பர். இந்த நிலையில் தான், மோசடிக்காரர்கள் இதனை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவதாக போலீசார் எச்சரித்துள்ளனர். 

5 / 5

புத்தாண்டு சிறப்பு பரிசு வேண்டும் என்றால் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள், புத்தாண்டு சலுகை, புத்தாண்டு வாழ்த்து என் கூறி லிங் அனுப்பப்பட்டு அதன் மூலம் இந்த மோசடி நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு வரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் குறித்து கவனமாக இருக்க காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.