முகூர்த்தம், வார இறுதி நாட்கள்.. ஊருக்கு கிளம்புறீங்களா? போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

TNSTC Special Buses : சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு 2025 மே 23ஆம் தேதியான இன்று முதல் 2 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுபமுகூர்த்தம் நாள் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு மாவட்டங்களுக்கு 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

முகூர்த்தம், வார இறுதி நாட்கள்..  ஊருக்கு கிளம்புறீங்களா?  போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பு

சிறப்பு பேருந்துகள்

Updated On: 

23 May 2025 07:17 AM

சென்னை, மே 23 : சுப முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை (TNSTC Special Buses) இயக்கப்படுகிறது. 2025 மே 23ஆம் தேதியான இன்று முதல் பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, சென்னை பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும். இதற்கிடையில், தற்போது கோடை விடுமுறை இருப்பதால், சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்று வருகின்றனர். இதனால், வழக்கத்தை விடவே பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் இருக்கும். இதனால், பயணிகளின் சிரமத்தை தவிர்க்க போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது.

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

அந்த வகையில், தற்போது  முக்கிய அறிவிப்பை போக்குவரத்து கழகம் வெளியிட்டு உள்ளது.  அதாவது, வார இறுதி நாட்கள், சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு, 2025 மே 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளில், கூடுதலாக 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

2025 மே 23ஆம் தேதியான இன்று முகூர்த்தம் நாளாகும். இதனை அடுத்து, சனி, ஞாயிறு என வார இறுதி நாட்கள் வருகிறது. இதனால், பயணிகளின் வசதிக்காக மூன்று நாட்களுக்கு 1,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 2025 மே 23ஆம் தேதியான இன்று 570 பேருந்துகளும், 2025 மே 24ஆம் தேதி சனிக்கிழமை 605 பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

எந்தெந்த ஊர்களுக்கு?


மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூர், சேலம், கும்பகோணம் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து 2025 மே 23,24ஆம் தேதிகளில் பெங்களூரு, ஓசூர் மற்றும் வேளாங்கண்ணிக்கு 100 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், பெங்களூரு, ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களில் இருந்து 250 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 2025 மே 23,24ஆம் தேதிகளில் 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 25ஆம் தேதி பயணிகள் தங்கள் சொந்த ஊர்களிலிருந்து திரும்புவதற்கு, அனைத்து முக்கிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

2025 மே 23ஆம் தேதிக்கு 10,178 பயணிகளும், 2025 மே 24ஆம் தேதிக்கு 6,353 பயணிகளும், 2025 மே 25ஆம் தேதிக்கு 9,837 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். கடைசி நேர நெரிசலைத் தவிர்க்க பயணிகள் www.tnstc.in அல்லது மொபைல் செயலி TNSTC மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.