School Reopen : பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா?.. வெளியான முக்கிய தகவல்!

Tamil Nadu School Reopening Date 2025 | தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், வெயிலின் தாக்கத்தை பொருத்து இந்த தேதியில் மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

School Reopen : பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறதா?.. வெளியான முக்கிய தகவல்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 May 2025 08:03 AM

சென்னை, மே 23 : தமிழகத்தில் பொதுவாக மே மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை (Summer Holiday) அளிக்கப்படும். ஒரு மாத விடுமுறைக்கு பிறகு ஜூன் மாதத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் வெயிலின் தாக்கம் மாறுபட்டுக் கொண்டே இருக்கும் நிலையில், வெயிலின் தீவிரத்தை பொருத்து ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், 2025-ல் ஜூன் இரண்டாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் கோடை விடுமுறையில் இருக்கும் பள்ளி மாணவர்கள்

தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நிறைவுற்ற நிலையில் ஏப்ரல் 25, 2025 முதல் மாணவர்கள் கோடை விடுமுறையில் உள்ளனர். இந்த நிலையில், ஒரு மாதக கோடை விடுமுறைக்கு பின்னர், ஜூன் 2, 2025 அன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து சமைப்பதில் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு ஜூன் 2, 2025 என்று கூறி இருக்கிறோம்.

அந்த நேரத்தில் வெயிலின் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டு, தமிழகத்தில் முதலமைச்சர் அலுவலகத்தில் வானிலை குறித்த பிரத்தியேக குழு அமைக்கப்பட்ட செயல்பட்டு வருகிறது. அவர்கள் சொல்வதை பொருத்து பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

தமிழகத்தில் மிதமான வானிலை நிலவுவதால் பள்ளிகள் திறப்பு தள்ளிபோக வாய்ப்பில்லை

தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தை பொருத்து பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்த நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தனது சற்று குளிர்ச்சியான சூழல் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளி போகாது என கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை திறப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தொடக்கக்கல்வி இயக்குனர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.