Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. சென்னைக்கு எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : வங்கக் கடலில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில், தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக, நீலகிரி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது.

3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. சென்னைக்கு எப்படி? லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
மழைImage Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 May 2025 06:20 AM

சென்னை, மே 16 : தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை (tamil nadu weather alert) வெளுக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை மிதமான மழை பெய்யக் கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் இருந்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. மாலை நேரத்திற்கு பிறகு, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக, நீலகிரி, கோவை, ஈரோடு, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 2025 மே 15ஆம் தேதியான நேற்று கூட நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.

3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை

இதனால், அப்பகுதியில் வெப்பம் சூழல் குறைவாகவே உள்ளது. அதே நேரத்தில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. எனவே, அடுத்த சில நாட்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம். அதன்படி, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் அதற்குபிறக மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2025 மே 16ஆம் தேதியான இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். மேலும், தருமபுரி, திருப்பத்தூர், கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என கூறப்பட்டுள்ளது.

2025 மே 17ஆம் தேதியான நாளை ஈரோடு, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 17ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னைக்கு எப்படி?

2025 மே 18ஆம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூர் சேலம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. அதன்பிறகு, மே 21ஆம் தேதி வரையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

வெப்பநிலையை பொறுத்தவரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகப்ட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிகிறது.

சென்னையில் 2025 மே 16ஆம் தேதியான இன்று நகரின் ஒருசில பகுதியில் மிதமான மழையும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?...
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு...
+1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!
+1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!...
திருவண்ணாமலை: சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி
திருவண்ணாமலை: சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி...
வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்?
வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்?...
வார இறுதியை முன்னிட்டு தமிழகத்தில் 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்.!
வார இறுதியை முன்னிட்டு தமிழகத்தில் 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்.!...
தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!
தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!...
ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு.. என்ன மேட்டர்?
ராகுல் காந்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு.. என்ன மேட்டர்?...
புதுக்கோட்டை: பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்டவர் பலி
புதுக்கோட்டை: பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்டவர் பலி...
பஸ் ஸ்டாண்டில் தனி மரமாக நின்றேன் - லோகேஷ் கனகராஜ் உருக்கம்!
பஸ் ஸ்டாண்டில் தனி மரமாக நின்றேன் - லோகேஷ் கனகராஜ் உருக்கம்!...
பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு!
பேச்சுவார்த்தைக்கு தயார் - பாகிஸ்தான் பிரதமர் திடீர் அறிவிப்பு!...