Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதி: ஒருவர் பலி

Pudukkottai Food Poisoning: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில், பிரியாணி உண்ட 50க்கும் மேற்பட்டோர் உடல்நலக் கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்தார். உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கெட்டுப்போன உணவு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட பலர் மருத்துவமனையில் அனுமதி: ஒருவர் பலி
பிறந்தநாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட ஒருவர் பலி Image Source: social media
sivasankari-bose
Sivasankari Bose | Published: 16 May 2025 08:20 AM

புதுக்கோட்டை மே 16: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி (Aranthangi, Pudukkottai District) அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழா ஒன்றில் 9At a birthday party) உணவு சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏம்பல் அருகே நடந்த பிறந்த நாள் விழாவில் பிரியாணி சாப்பிட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவுக்கு பிறகு வயோதிபர் ஒருவர் சிகிச்சை பெறாமல் திடீரென உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உணவு கெட்டுப்போனதால் கேக் மாதிரியே மட்டும் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட விழா

அரிமளம் ஒன்றியத்துக்குட்பட்ட ஏம்பல் அருகே உள்ள வேளாணி கிராமத்தை சேர்ந்த முத்தையா என்பவரது பிள்ளைக்கு பிறந்தநாள் விழா கடந்த வாரம் நடைபெற்றது. இதில் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சைவம் மற்றும் அசைவம் என இருவகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

பிரியாணி சாப்பிட்டவுடன் உடல் நலக் கோளாறு

விழாவில் வழங்கப்பட்ட பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் பலருக்கும் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. இதையடுத்து, 50-க்கும் மேற்பட்டோர் ஏம்பல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அறந்தாங்கி அரசு மருத்துவமனை, காரைக்குடி மற்றும் சூரக்குடி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சை பெறாமல் இருந்த வயோதிபர் மரணம்

அதே கிராமத்தை சேர்ந்த கருப்பையா (வயது 70) என்பவர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. அவர் அன்றிரவு திடீரென உயிரிழந்ததை அக்கம் பக்கத்தினர் கண்டதும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக ஏம்பல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உணவுப் பாதுகாப்புத் துறையினர் விசாரணை

இச்சம்பவம் குறித்து உடனடியாக சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையினர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உணவுகள் அனைத்தும் கெட்டுப்போன நிலையில் இருந்ததால், கேக் மாதிரியை மட்டும் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். இது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகள் நேரில் ஆய்வு

சம்பவ இடத்திற்கு அறந்தாங்கி கோட்டாட்சியர் சிவகுமார், துணைக் கண்காணிப்பாளர் ரவிகுமார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் மத்தியில் இது பெரும் கவலையையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மீண்டுமா? பரவும் கொரோனா தொற்று.. பாதித்த சிங்கப்பூர், ஹாங்காங்!
மீண்டுமா? பரவும் கொரோனா தொற்று.. பாதித்த சிங்கப்பூர், ஹாங்காங்!...
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான தகவல்
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான தகவல்...
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!...
முதுகு வலி: சித்த மருத்துவ சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?
முதுகு வலி: சித்த மருத்துவ சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?...
வீட்டுக்கு வந்த 3 பேர்.. காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!
வீட்டுக்கு வந்த 3 பேர்.. காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!...
ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு தரும் பதஞ்சலியின் மருந்துகள்!
ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு தரும் பதஞ்சலியின் மருந்துகள்!...
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?...
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?...
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்...
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!...
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?...