Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோவையில் பயங்கரம்.. கல்லூரி மாணவர் கொடூர கொலை.. போதை ஊசி செலுத்தி கொன்ற கும்பல்!

Coimbatore College Student Murder : கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் போதை ஊசி செலுத்தி, தலையணையால் மூச்சுத் திணறடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். காதலியுடன் வீடியோ காலில் பேசிய ஆத்திரத்தில், 4 பேர் கொண்ட கும்பல் இந்த கொடூர கொலை செய்துள்ளது. இதனை அடுத்து, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பயங்கரம்.. கல்லூரி மாணவர் கொடூர கொலை.. போதை ஊசி செலுத்தி கொன்ற கும்பல்!
கல்லூரி மாணவர் கொலைImage Source: Pinterest
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 May 2025 06:40 AM

கோயம்புத்தூர், மே 16 :  கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலியுடன் பேசிய ஆத்திரத்தில்,  4 பேர் கொண்ட கும்பல், கல்லூரி மாணவருக்கு போதை ஊசி செலுத்தி, கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.  இதனை அடுத்து, 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை வெள்ளலூர் பகுதியில் அடையாளம் தெரியாத நபரன் உடல் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளலூரில் உள்ள பேருந்து நிலையத்தில் உடலை கண்டெடுத்தனர். இதனை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது, அவர் கல்லூரி மாணவர் என்றும் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், 4 இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கல்லூரி மாணவர் கொலை

மதுரையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சூர்யா. இவர் சென்னையில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அதே, அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் கார்த்தி (21), சுந்தரபுரத்தைச் சேர்ந்த நரேன் கார்த்திக் (20), கிணத்துக்கடவைச் சேர்ந்த மாதேஷ் (21), கோவை போத்தனூரைச் சேர்ந்த முகமது ரஃபி (21) .

இவர்கள் நான்கு பேரும் குனியமுத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். பேரூர் போஸ்டல் காலனியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கின்றனர். இந்த நிலையில், கார்த்திக்கின் காதலி அடிக்கடி சூர்யாவுடன் பேசி இருக்கிறார். இதுகுறித்து கார்த்திக் அவரது காதலியிடம் கூறியும், தொடர்ந்து சூர்யாவிடம் வீடியோ கால் மூலமும் பேசி வந்தார்.

இதனால், சூர்யா மீது கார்த்திக் கடுப்பில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால், இருவருக்கும் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனிடையே, 2025 மே 13ஆம் தேதி கார்த்தியும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சூர்யாவை தங்கள் வீட்டிற்கு அழைத்துள்னர்.

போதை ஊசி செலுத்தி கொன்று கொடூரம்

வீட்டிற்கு வந்த சூர்யாவுக்கு அதிக அளவு மது கொடுத்தனர். அதோடு, அவருக்கு போதை ஊசியும் செலுத்தியுள்ளனர். இதனால், மயங்கி சூர்யாவை தலையணையால் மூச்சுத் திணறடித்து கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து, அந்த நான்கு பேரும் அன்று இரவு முழுவதும் உடலை என்ன செய்வதன்று தெரியாமல் அப்படியே பிணத்துடன் இருந்துள்ளனர்.

இதனை அடுத்து, அடுத்த நாள் உடலை ஒரு காரில் கொண்டு சென்று வெள்ளலூரில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசி உள்ளனர். இந்த உடலை கைப்பற்றிய போலீசார், நான்கு பேரையும் கைது செய்தனர்.  கார்த்திக், மாதேஷ், முகமது ரஃபி, நரேன் கார்த்திக் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.

துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?...
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?...
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்...
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!...
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?...
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு...
+1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!
+1 தேர்வு முடிவுகள் வெளியீடு.. 92.09 சதவீத மாணவர்கள் தேர்ச்சி!...
திருவண்ணாமலை: சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி
திருவண்ணாமலை: சேலையில் சிக்கி உயிரிழந்த 11 வயது சிறுமி...
வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்?
வெளியானது 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. எந்த மாவட்டம் டாப்?...
வார இறுதியை முன்னிட்டு தமிழகத்தில் 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்.!
வார இறுதியை முன்னிட்டு தமிழகத்தில் 1,739 சிறப்பு பஸ்கள் இயக்கம்.!...
தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!
தாலிபான் நிர்வாகத்திடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்!...