Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்

Tamil Nadu School Summer Vacation: தமிழகத்தில் ஆண்டு இறுதித் தேர்வுகள் முன்கூட்டியே முடிந்து, ஏப்ரல் நான்காவது வாரத்தில் கோடை விடுமுறை தொடங்கியது. வெப்ப அலை காரணமாக ஜூன் மாத பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப்போகும் சாத்தியம் உள்ளது. முதல்வர் அலுவலகத்தின் காலநிலை அறிக்கையின் அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்படும்.

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? வெளியான முக்கிய தகவல்
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி வெளியான தகவல் Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 16 May 2025 06:39 AM

தமிழ்நாடு மே 16: தமிழகத்தில் ஆண்டு இறுதித் தேர்வு (End of year exams in Tamil Nadu) முன்கூட்டியே முடிந்து, 2025 ஏப்ரல் 4ஆம் வாரத்திலிருந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. 2025 ஜூன் மாத வெப்பம் அதிகரித்து வரும் காரணத்தால், பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிப் போகும் வாய்ப்பு உள்ளது. தமிழக முதல்வர் (Tamil Nadu Chief Minister Stalin) அலுவலகத்தின் காலநிலை மேலாண்மைக் குழு வழங்கும் வானிலை அறிக்கையின் அடிப்படையில் பள்ளிகள் திறப்புத் தேதி தீர்மானிக்கப்படும். இதற்கிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் 2025 ஜூன் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் நடைபெற உள்ளன. இம்முகாம்களில் சில பள்ளி வளாகங்களிலும் நடைபெறும் என்பதால், பள்ளிகள் திறப்பு மேலும் தாமதமாகும் என மக்கள் கருதுகின்றனர். மே மாத மூன்றாவது வாரத்திற்குள் பள்ளிகள் திறப்பு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெயில் அதிகரிப்பால் தேர்வு அட்டவணையில் மாற்றம்

தமிழக பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வுகள் ஏப்ரல் மாதம் தொடங்கின. வெயிலின் தீவிரம் அதிகரித்ததை கருத்தில் கொண்டு, அரசு இறுதித் தேர்வுகளை திட்டமிட்ட தேதிக்கு முன்னதாக முடித்து, ஏப்ரல் நான்காவது வாரத்திலேயே பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை அறிவித்தது.

விடுமுறையில் மாணவர்களும் ஆசிரியர்களும்

விடுமுறையை முன்னிட்டு மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு பயணம், சுற்றுலா திட்டங்கள், பண்டிகைகளில் பங்கேற்பு என விடுமுறை நாட்களை உற்சாகமாக அனுபவித்து வருகின்றனர். தேர்வுத் தாள்கள் திருத்தம் மற்றும் மாணவர் சேர்க்கை பணிகள் முடிந்துள்ள நிலையில், ஆசிரியர்களும் தற்போது விடுமுறையில் உள்ளனர்.

பள்ளிகள் திறப்பு தேதி எப்போது?

பொதுவாக பள்ளிகள் ஜூன் மாத முதல் வாரத்தில் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வெப்ப அலை காரணமாக பள்ளிகள் ஜூன் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரங்களில் தள்ளி திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, இந்த ஆண்டுக்கான பள்ளி திறப்பு தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வானிலை ரிப்போர்ட்டை அடிப்படையாகக் கொண்டு தீர்மானம்

முதல்வர் அலுவலகத்தில் செயல்படும் காலநிலை மேலாண்மைக் குழு, ஜூன் மாத வானிலை குறித்து முதல்வருக்கு அறிக்கை அளிக்கவிருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் பள்ளி திறப்புத் தேதி முடிவு செய்யப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தவிர, பள்ளிகள் திறப்பு தேதி மேலும் தள்ளிப் போகலாம் என்பதையும் அரசு விடுத்துள்ள பிற அறிவிப்புகள் உணர்த்துகின்றன.

மகளிர் உரிமைத் தொகை – புதிய விண்ணப்ப முகாம்கள்

தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது 1.15 கோடி பயனாளிகள் உள்ளனர். இந்த திட்டத்தில் புதிதாக இணைய விரும்பும் பெண்களுக்காக 2025 ஜூன் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் 9000 இடங்களில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலினும், அமைச்சர்களும் அறிவித்துள்ளனர்.

பள்ளி வளாகங்களில் முகாம்கள் – பள்ளி திறப்பு தேதி தொடர்பான சந்தேகம்

2023 ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற முகாம்களில் சில பள்ளி வளாகங்களிலும் இடம் பெற்றன. தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் முதல்வர் ஸ்டாலின் நேரில் பங்கேற்றதையும் நினைவுபடுத்தலாம். இந்த ஆண்டும் சில முகாம்கள் பள்ளிகளில் நடைபெறும் என்பதால், பள்ளிகள் திறப்பதற்கான தேதி தள்ளி போகலாம் என்பதே பொதுமக்கள் எண்ணம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பாரம்

மகளிர் உரிமைத் தொகை முகாம்கள் மற்றும் காலநிலை அறிக்கையை தொடர்ந்து, 2025 மே மாதம் மூன்றாவது வாரத்திற்குள் தமிழக அரசு பள்ளிகள் திறப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான தகவல்
தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. விஜய் ஆப்சென்ட்.. வெளியான தகவல்...
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!
ஜோதிடம் என்பது உண்மை.. நடிகர் ராஜேஷின் ஆன்மிக அனுபவங்கள்!...
முதுகு வலி: சித்த மருத்துவ சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?
முதுகு வலி: சித்த மருத்துவ சிகிச்சை மூலம் எப்படி சரி செய்வது?...
வீட்டுக்கு வந்த 3 பேர்.. காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!
வீட்டுக்கு வந்த 3 பேர்.. காத்திருந்த இளைஞருக்கு நேர்ந்த கதி!...
ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு தரும் பதஞ்சலியின் மருந்துகள்!
ஃபேட்டி லிவர் பிரச்னைக்கு தீர்வு தரும் பதஞ்சலியின் மருந்துகள்!...
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?
துணைத்தேர்வுகளுக்கு எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?...
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?
பாமகவில் மோதல்.. கூட்டத்தை புறக்கணித்த அன்புமணி.. என்ன விஷயம்?...
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்
மாமனாக மக்களின் மனதை வென்றாரா சூரி? ட்விட்டர் விமர்சனம்...
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
'டிடி நெக்ஸ்ட் லெவல்' படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!...
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?
TN 10, 11th Result: அதிக தேர்ச்சி விகிதம் பெற்ற மாவட்டங்கள் எவை?...
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு
சென்னையில் டாஸ்மாக் அதிகாரிகள் வீட்டில் ED ரெய்டு...