மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்திற்கு அதிர்ச்சி.. கார் விபத்தில் உயிரிழந்த பேத்தி!

EX Minister Dindigul Srinivasan : அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி கோவையில் கார் விபத்தில் உயிரிழந்தது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரிக்கு உறவினர்களுடன் சுற்றுலா சென்ற அவர், கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி திவ்ய பிரியா உயிரிழந்துள்ளார்.

மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்திற்கு அதிர்ச்சி.. கார் விபத்தில் உயிரிழந்த பேத்தி!

திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி கார் விபத்தில் பலி

Updated On: 

23 May 2025 06:59 AM

கோயம்புத்தூர், மே 23 : கோவை மாவட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் (EX Minister dindigul Srinivasan) பேத்தி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக முன்னாள் அ மைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் மகள் வழி பேத்தி திவ்ய பிரியா (28). இவர் மதுரையில் பல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் கார்த்திக் ராஜா. இந்த நிலையில், திவ்யபிரியா, அவரது கணவர் கார்த்திக் ராஜா மற்றும அவரது உறவினர்கள் வளர்மதி (48), பரமேஸ்வரி (44) ஆகியோர் நீலகரிக்கு சுற்றுலா சென்றிருந்தனர். கார்த்கின் நண்பர் பார்த்திபன் காரை ஓட்டி வந்தார். 2025 மே 20ஆம் தேதி நீலகிரி சென்ற அவர்கள், 2025 மே 22ஆம் தேதியான நேற்று மாலை மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மாஜி அமைச்சர் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு

அப்போது, மேட்டுப்பாளைம் கல்லாறு அருகே கார் சென்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதன்பிறகு, அந்த கார் மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில், திவ்ய பிரியா, பரமேஸ்வரி, கார்த்திக் ராஜா உள்ளிட்டோர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அவ்வழியாக சென்றவர்கள், உடனே படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அவர்களை நான்கு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில், திவ்ய பிரியா மட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, பார்த்திபன் காரை ஓட்டிச் சென்றதாகவும், கல்லார் அருகே வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், வாகனம் சாலையோரத்தில் இருந்த ஒரு மரத்தில் மோதியதாகவும், திவ்யப்ரியா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் குடும்பத்தில் சோகம்

மற்றவர்கள் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த  விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  இந்த விபத்தை அடுத்து, அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து  பாதிப்பு ஏற்பட்டது. அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு சீரானதாக போலீசார் கூறினர்.  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேத்தி கார் விபத்தில் உயிரிழந்துள்ளது அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திண்டுக்கல் சீனிவான் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆவார். இவர் 1989ஆம் ஆண்டு முதல்முறையாக மக்களவை தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானார். அதன்பிறகு, மூன்று முறை மக்களவை எம்.பியாக தொடர்ந்தார். 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திண்டுக்கல் சீனிவாசன், வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார் என்பது குறிப்பிடத்தக்கது.