அடுத்த 5 நாட்களுக்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி? லேட்டஸ் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிமாக இருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை
சென்னை, ஜூன் 29 : தமிழகத்தில் அடுத்த ஐந்து தினங்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu Weather Forecast) தெரிவித்துள்ளது. மேலும், சென்னையிலும் மழை (Chennai Rains) பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2025 மே மாதத்தில் இருந்தே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தொடங்கியதி இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோடை வெயில் அதிகமாக இருக்கும் மே மாதத்தில் மழை கொட்டியது. அதே நேரத்தில், மழை தொடங்க இருக்கும் ஜூன் மாதத்தில் வெயில் கொளுத்தி வருகிறது. தற்போது, மழை பொழிவு குறைந்து, பல்வேறு மாவட்டங்களில் வெயில் அடித்து வருகிறது. இருப்பினும், அவ்வப்போது, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
அடுத்த 5 நாட்களுக்கு கொட்டும் மழை
2025 ஜூன் 28ஆம் தேதியான நேற்று இரவு கூட சென்னையில் இடி, மின்னலுடடன் மழை வெளுத்து வாங்கியது. திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.
அதன்படி, மேற்கு திசை வேக மாறுபாடு காரணாக, தமிழக்ததில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடுக காரணமாக, தமிழக்ததில் 2025 ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 4ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2025 ஜூன் 29ஆம் தேதியான இன்று தமிழகத்தில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 2025 ஜூன் 29ஆம் தேதி முதல் 202 ஜூன் 30ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிமாக இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் எப்படி?
DAILY WEATHER REPORT FOR TAMILNADU, PUDUCHERRY & KARAIKAL AREA https://t.co/LOvDNF1Sqf pic.twitter.com/8JqWSdR7Ge
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) June 28, 2025
அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 2025 ஜூன் 29ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.