அடுத்த சில மணிநேரத்தில் கொட்டப்போகும் மழை.. எங்கெங்கு தெரியுமா..? லேட்டட்ஸ் வானிலை அப்டேட்!
Tamil Nadu Weather Update: சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று இரவு 8 மணிக்குள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது. அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கவும், சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வானிலை நிலவரம்
சென்னை, மே 11: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர் மற்றும் ராமநாதபுரம் (Ramanathapuram) மாவட்டங்களில் இரவு 8 மணிக்குள்ளாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் (IMD Chennai) கணித்துள்ளது. அதேநேரத்தில், அடுத்த சில நாட்களில் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை (Temperature) அதிகரிக்கக்கூடும் என்றும், ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் வடதமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் 35–39° செல்சியஸூம், தென்தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38–40° செல்சியஸூம், வடதமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37° செல்சியஸூம், தென்தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளில் 35-36° செல்சியஸ், மலைப்பகுதிகளில் 20-28° செல்சியஸ் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு:
தென்மேற்கு பருவமழை நிகோபார் தீவு, தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 2026 மே 13ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்புள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 2025 மே 12ம் தேதியான நாளை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 2025 மே 13ம் தேதியான நாளை மறுநாள் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அன்றைய நாளில் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளிலும், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 மே 14ம் தேதி மற்றும் 2025 மே 15ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2025 மே 16ம் தேதி மற்றும் 2025 மே 17ம் தேதி வரை தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
2025 மே 12ம் தேதியான நாளை சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகளில் 2025 மே 12ம் தேதியான நாளை முதல் 2025 மே 15ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் 2025 மே 12ம் தேதியான நாளை முதல் 2025 மே 15ம் தேதி வரை எச்சரிக்கை ஏதுமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.