Tamil Nadu News Live: தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!
Tamil Nadu Breaking News Today 9 August 2025, Live Updates: சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வரும் தூய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழ்நாடு செய்திகள்
LIVE NEWS & UPDATES
-
ஐ.டி ஊழியர் கவின் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
நெல்லையில் ஐ.டி ஊழியர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்து சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆணவ படுகொலை தடுப்புச் சட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக இயற்ற வலியுறுத்தப்பட்டது.
-
தீண்டாமை சுவர் அகற்ற எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
கரூர் மாவட்டத்தில் உள்ள முத்துலாடம்பட்டி தீண்டாமை சுவர் அகற்றுவதை எதிர்த்து நள்ளிரவில் ஒரு பிரிவினர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முத்துலாடம்பட்டியில் 400க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தொல்லை.. மகனை கொன்ற தாய்!
சென்னையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தொடர்ச்சியாக சண்டையிட்டு மிரட்டி வந்த மகனை ஆத்திரத்தில் கத்தியால் கொலை செய்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு வடபழனி காவல்நிலையத்தில் தாய் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
விநாயகர் சதுர்த்தி விழா.. சிலைகளை கரைக்க வழிமுறைகள் வெளியீடு
விநாயகர் சதுர்த்தி விழாவானது ஆகஸ்ட் 27ம் தேதி புதன்கிழமை வருகிறது. இதனை முன்னிட்டு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட இடங்களில் கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.. மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்பு
மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில பாமக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இதில் பல்வேறு மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ராமதாஸ் புகைப்படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதில் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஒவ்வொரு தெருவாக சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி!
சென்னையில் ஒவ்வொரு தெருவாக சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கப்பட்டது. இதனை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தொடங்கி வைத்தார். நாள் ஒன்றிற்கு தோராயமாக 3000 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்புவனம் அஜித்குமார் மரணம்.. நிகிதா பொய் புகார் கொடுத்தாரா?
திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக நிகிதா அளித்தது பொய் புகாராக இருக்கலாம் என சிபிஐ சந்தேகமடைந்துள்ளது. காரில் இருந்த நகை தொலைந்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் கோவில் பார்க்கிங்கை விட்டு நிகிதா கார் வெளியே செல்லவே இல்லை என சிபிஐ விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
கோவையில் இண்டிகோ விமானம் மீது லேசர் லைட் .. போலீசார் விசாரணை!
நேற்றிரவு (ஆகஸ்ட் 8) பெங்களூருவில் இருந்து கோயம்புத்தூருக்கு இண்டிகோ விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது தரையிறங்கும்போது விமானி அறையை நோக்கி லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலையம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பீளமேடு போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படவில்லை.. ஓபிஎஸ் குற்றச்சாட்டு!
வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததன் காரணமாக காவிரி நீர் கடைமடை பகுதிகளுக்கு செல்லவில்லை என ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். உடனடியாக பாசன கால்வாய்களை தூர்வாரி விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
அரசு பொறியியல் கல்லூரியில் போலி நியமன ஆணை – 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் பணிக்கான போலி நியமன ஆணைகளை வழங்கிய 3 பேரை விழுப்புரத்தில் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போலி லெட்டர் பேடு, அரசு முத்திரை, கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
-
கரடி கடித்து 3 பெண்கள் காயம்.. கூண்டு வைத்து பிடிக்கும் பணி தீவிரம்!
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் சுற்றித்திரியும் கரடியை பிடிக்க 2வது நாளாக வனத்துறை கூண்டு வைத்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கரடி கடித்து 3 பெண்கள் காயமடைந்த நிலையில் விரைந்து பிடிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது.
-
பாமக பொதுக்குழு கூட்டம்.. அன்புமணி பேசப்போவது என்ன?
பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே தந்தை ராமதாஸூடன் கருத்து மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் இன்றைய கூட்டத்தில் அவர் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
-
திமுக ஐடி அணியைச் சேர்ந்தவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் பகுதியில் வசித்து வரும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த சௌந்தர், கௌதமன் ஆகியோர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பொங்கல் பண்டிகைக்குள் 110 புதிய சொகுசு பேருந்துகள்!
பொங்கல் பண்டிகைக்குள் 110 புதிய சொகுசு பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4,300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளதாகவும், இவற்றில் 1500 பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை இரண்டு கட்டங்களாக பயன்பாட்டிற்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆடி மாத பௌர்ணமி.. வெகுவிமரிசையாக நடைபெற்ற கள்ளழகர் தேரோட்டம்
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு மதுரையில் புகழ்பெற்ற கள்ளழகர் கோயில் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கள்ளழகரான சுந்தரராஜ பெருமாள் பூதேவி மற்றும் ஸ்ரீதேவியுடன் தேரில் எழுந்தருளினார்.
-
கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!
ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலத்தில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும் நான்கு மணி நேரம் காத்திருந்து, அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
-
6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை.. திமுக ஆட்சியை விமர்சித்த இபிஎஸ்
திமுக ஆட்சியில் கடந்த 6 மாதத்தில் 6 காவலர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மக்களிடம் நன்மதிப்பை அதிமுக அரசு பெற்றிருந்ததாகவும், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
-
ஆணவக்கொலைகளை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம்.. விசிக ஆர்ப்பாட்டம்
ஆணவக்கொலைகளை தடுக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்றக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்கிறார்.
-
சிக்கன் ரைஸ் சாப்பிட்ட கல்லூரி மாணவி உயிரிழப்பு? – அதிர்ச்சி தகவல்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கல்லூரி மாணவி திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டலில் சாப்பிட்ட சிக்கன் ரைஸ்தான் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு.. முதலமைச்சர் பெருமிதம்
கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது, இதுதான் கம்பர் கண்ட கனவு என கூறினார். மேலும் படிக்க
-
திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது? – இபிஎஸ் கேள்வி
திமுக ஆட்சியில் எவ்வளவு முதலீடு ஈர்க்கப்பட்டது? என்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அதிமுக ஆட்சியில் ரூ.3.05 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டது எனவும், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளபட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே அம்மாவட்டத்தில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
-
பாமக பொதுக்குழு கூட்டம்.. அன்புமணி எடுத்த அதிரடி முடிவு
பாமக தலைவர் அன்புமணி தலைமையில் இன்று மாமல்லபுரத்தில் இருக்கக்கூடிய கான்ப்ளூயன்ஸ் அரங்கில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்த்துள்ளார். ஆனாலும் கூட்டம் நடைபெறும் நிலையில் ஜனநாயக முறையில் விவாதிப்பதற்காக காத்திருக்கிறேன் என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
-
எடப்பாடி பழனிசாமிக்கு கவலை வேண்டாம்.. சண்முகம் பதிலடி
தனது தேர்தல் பிரச்சாரங்களின் போது எடப்பாடி பழனிசாமி திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடி வருகிறார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் எங்களைப் பற்றி எடப்பாடி பழனிசாமி கவலைப்பட வேண்டாம் என கூறியுள்ளார். மேலும் படிக்க
-
போக்குவரத்து நெரிசல்.. தாம்பரம் பகுதியில் இன்று முதல் புது ரூல்ஸ்!
தாம்பரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை பல முக்கிய சாலைகளில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டமன்ற தேர்தல்.. வியூகம் அமைக்க பாஜக முடிவு
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பிலான ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொள்ளவுள்ளார். தேர்தல் வியூகம் தொடர்பாக ஆலோசனை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News in Tamil Today 6 August 2025, Live Updates: அன்புமணி தலைமையில் நடைபெறும் பாமக பொதுக்குழு கூட்டத்துக்கு தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணியை நேரில் வர சொன்னார். ஆனால் அன்புமணி நேரில் ஆஜராக, ராமதாஸ் காணொலி வாயிலாக வாதத்தை எடுத்துரைத்தார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மழை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கோவை, நீலகிரி, தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வறுமை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும், இதுதான் கம்பர் கண்ட கனவு என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கன்னியாக்குமரியில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு செல்ல இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யலாம் என பூம்புகார் கப்பல் போக்குவத்து துறை தெரிவித்துள்ளது. நேரம் மற்றும் விலை அடங்கிய பிரிவு செயல்பட தொடங்கியுள்ளது. இப்படியாக தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.