Tamil Nadu News Live : ஓவர் கோட் அணிய பள்ளி மாணவிகளுக்கு உத்தரவு
Tamil Nadu Breaking News Today 8 August 2025, Live Updates: பள்ளி மாணவிகளின் சீருடையில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளது புதுச்சேரி அரசு. சுடிதார் சீருடையுடன் சேர்த்து ஓவர் கோட் அணிய வேண்டுமென்ற அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை தமிழகத்தில் ஏற்கெனவே உள்ளது

பள்ளி மாணவிகள்
LIVE NEWS & UPDATES
-
Nainar Nagendran: எம்ஜிஆர் பாணியில் நயினார் நாகேந்திரன்.. என்ன நடந்தது?
4777 என எம்ஜிஆர் பயன்படுத்திய கார் நம்பரை கொண்டு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு தொண்டர் ஒருவர் பிரச்சார வாகனம் தயார் செய்துள்ளார். இதனை நயினாரிடம் வழங்கிய நிலையில் எம்ஜிஆர் கார் என அறிந்து அவரே ஓட்டிப் பார்த்து வியந்தார் .
-
நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதி
நாகாலாந்து ஆளுநரான இல. கணேசன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தடுக்கி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
ஓவர் கோட் வடிவம் – அதிகாரிகள் அறிவிப்பார்கள்
இது தொடர்பான அறிவிப்பில், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு பள்ளியிலும் தலைமை ஆசிரியர்களை சந்தித்து ஓவர் கோட் வடிவம் குறித்து தெரிவிப்பார்கள். இதனை மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரிவித்து ஓவர் கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சுடிதார் மீது ஓவர் கோட் ஏன்?
தற்போது மாணவிகள் சீருடை சுடிதார் மீது துப்பட்டா அணிந்து வரும் நிலையில், தற்போது புதுச்சேரி அரசுப் பள்ளி சீருடையில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. சுடிதார் மீது ஓவர் கோட் அணிவது மாணவிகளுக்கு பாதுகாப்பானதாக கருதி, அந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சுடிதார் மீது ஓவர் கோட் – பள்ளி மாணவிகளுக்கு புதுச்சேரி அரசு உத்தரவு
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணியும் முறை உள்ளது. அதேபோல புதுச்சேரி அரசு தற்போது உத்தரவு பிறப்பித்த்துள்ளது. 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணிய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
-
அலுவல் ரீதியாக மட்டுமே – நீதிபதிகள் அமர்வு
ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல் கட்சிகளுக்கு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்படவில்லை என்றும் அலுவல் ரீதியாக மட்டுமே அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த தலைமை நீதிபதி அமர்வு, தடை விதிக்க முடியாது என கூறி உத்தரவிட்டனர்
-
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வழக்கு – கோர்ட் தள்ளுபடி
4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர்களாக நியமித்தது சட்டப்படி செல்லுபடியாகக் கூடியதல்ல என தொடரப்பட்ட வழக்கில் ரூ. 1 லட்சம் அபராதத்துடன் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.
-
BJP Meeting : பாஜகவின் மாநில மாநாடு
ஈபிஎஸ் பிரசாரம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி திருநெல்வேலியில் பாஜகவின் மாநில மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் – எடப்பாடி பழனிசாமி
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணி வலிமையாக இருக்கலாம் ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என உரையாற்றியுள்ளார்.
-
Edappadi K. Palaniswami : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஈபிஎஸ் கேள்வி
தொண்டர்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் எடப்பாடி பழனிசாமி, கம்யூனிஸ்டுகள் மக்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டனர். 50 மாதத்தில் ஒருமுறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்
-
கரடி தாக்கி மூன்று பெண்கள் படுகாயம்
தென்காசி – புளியங்குடி பகுதியில் கரடி தாக்கி மூன்று பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விவசாய நிலத்திற்குச் சென்ற மூன்று பெண்களை காட்டுப்பகுதியில் இருந்த கரடி வந்து அவர்களை தாக்கி தாக்கியதால் பெரும் அதிர்ச்சி
-
உயிருக்கு ஆபத்து என திடீரென சொன்ன குற்றவாளி
இந்நிலையில் நேற்று நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், கோர்ட்டில் இருந்து வெளியே வந்த தங்கப்பாண்டி எங்கள் உயிருக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காவல்துறை தான் பொறுப்பு என திடீரென தெரிவித்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
-
SSI Murder : உதவி காவல் ஆய்வாளர் கொலை அப்டேட்
திருப்பூர் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் அப்பா மகன்கள் சண்டையில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதில் மணிகண்டன் என்பவர் என்கவுண்டரில் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். மேலும் கைதான மூர்த்தி மற்றும் தங்கப்பாண்டிக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
-
குப்பை கிடங்காக மாறி வரும் சென்னை
கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக சென்னையில் குப்பைகள் அல்லாமல் அசுத்தமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பிரதான சாலைகளிலும் குப்பைகள் நிரம்பி கிடக்கின்றன.பல பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது.
-
பேச்சுவார்த்தை தோல்வி
போராடி வரும் தூய்மை பணியாளர்களை அமைச்சர் கே.என் நேரு, மேயர், பிரியா மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சு வார்த்தையில் சமரசம் எட்டப்படாத நிலையில் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்
-
8வது நாளாக தொடரும் போராட்டம்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் தனியார்மயமாக்க கூடாது எனவும் குறிப்பிட்டு தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தொடர்ந்து எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Chennai Sanitization Workers Protest: தூய்மை பணியாளர்கள் போராட்டம்
சென்னையில், தூய்மை பணியாளர் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Chennai Rains : சென்னை மழை நிலவரம் இதோ!
சென்னையை பொருத்தவரை, 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை எங்கெல்லாம் மழை இருக்கும்?
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் , விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன மழை பெய்யும் .ஆகஸ்ட் 9 ஆம் தேதியான நாளை தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
Tamil Nadu Rains : 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்
அதன்படி, தமிழகத்தில் 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது
-
Tamil Nadu Weather : கனமழை தொடரும் – வானிலை நிலவரம்
தென்னிந்திய பகுதியில் மேல் ஒரு வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த சில தினங்களுக்கு கனமழையாக தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Breaking News in Tamil Today 8 August 2025, Live Updates: தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 8, 2025 அன்று வரலட்சுமி விரதம் (Varalakshmi Vratam) கொண்டாடப்படவுள்ளது. ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விரத தினங்களில் வரலட்சுமி விரதமும் ஒன்று. இதுகுறித்த தகவல்களை விவரமாக பார்க்கலாம். வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆகஸ்ட் 8, 9, 10, 2025 ஆகிய 3 தினங்களும் சென்னையில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் (Special Bus) இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை உடனுக்குடன் இந்தப் பகுதியில் பார்க்கலாம். திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 8 அன்று கன முதல் மிக கன மழை (Rain Updates) பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆரெஞ்சு அலெர்ட் கொடுத்துள்ளது. சென்னையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 8,11, 13, 2025 ஆகிய 3 நாட்கள் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின ஒத்திகை நடைபெறவுள்ளது. இதற்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. இன்னும் பல முக்கியச் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்