Tamil Nadu Electricity Bill Hike: தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணம் உயர்வா..? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!
Tamil Nadu Power Tariff Increase: சமூக ஊடகங்களில் பரவிய 2025 ஜூலை முதல் தமிழ்நாட்டில் மின் கட்டணம் 3.16% உயர்வு என்ற செய்திக்கு, மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித உயர்வும் இல்லை என்றும், அனைத்து இலவச மின்சார திட்டங்களும் தொடரும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் கட்டணம் - அமைச்சர் சிவசங்கர்
சென்னை, மே 20: வருகின்ற 2025 ஜூலை மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் மின் கட்டணம் (Tamil Nadu EB Bil) 3.16 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. தமிழ்நாட்டின் மின்சார வாரியத்திற்கு வருவாய் இழப்பு இருந்து வருவதாகவும், இதை சரிசெய்யும் வகையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. முன்னதாக, இந்த வருவாய் இழப்பு காரணமாக கடந்த 2022ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மின்சார கட்டணங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டது. இதை தொடர்ந்து, வருகின்ற 2025 ஜூலை 1ம் தேதி மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட இருப்பதாகவும், இதற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் (Minister S. S. Sivasankar) வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சிவசங்கர் விளக்கம்:
கடந்த சில நாட்களில் தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயரப்போவதாக எழுந்த செய்தி தமிழக மக்களை அதிர்ச்சியடைய செய்தது. இந்தநிலையில், அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என்உம், வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக செய்தி சேனல்களில் மின் கட்டணம் உயரப்போவதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, மின் கட்டண உயர்வு குறித்து எந்த ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இருக்க கூடாது என்றும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்கள்.” என்று தெரிவித்தார்.
கடந்த சில ஆண்டுகளில் மின் கட்டணம் எப்படி..?<
மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை !
மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தினால் வெளியிடப்படவில்லை.@mkstalin @Udhaystalin @CMOTamilnadu pic.twitter.com/94oNMMF6Pn— Sivasankar SS (@sivasankar1ss) May 20, 2025
/h3>
தமிழ்நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் மின்சாரக் கட்டணமானது 2.18 சதவீதமும், 2025 ஜூலை மாதம் 4.83 சதவீதமும் அதிகரிக்கப்பட்டன. எனவே, 2025 ஜூலை 1ம் தேதி தமிழ்நாட்டில் மின்சார கட்டணங்கள் 3.16 சதவீதங்கள் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டது. வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு மின்சார கட்டணங்கள் அமல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு, தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.