‘குடும்ப சந்திப்பாக உணர்ந்தேன்’: சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

CM Stalin Meets Sonia and Rahul Gandhi: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், சோனியா மற்றும் ராகுல் காந்தியை சந்தித்தார். இது குடும்ப சந்திப்பாகவே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் முன்னர் பிரதமரையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப சந்திப்பாக உணர்ந்தேன்: சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

Published: 

23 May 2025 22:05 PM

டெல்லி மே 23: டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister M.K. Stalin), காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை (Congress leaders Sonia Gandhi and Rahul Gandhi) சந்தித்தார். இந்த சந்திப்பு ஜன்பத்தில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது. மத்திய அரசு நடத்தும் நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஸ்டாலின் டெல்லி (Delhi) சென்றுள்ளார். கடந்த ஆண்டுகளுக்கு மாறாக, இந்த ஆண்டு கூட்டத்தில் பங்கேற்று தமிழக நிதி கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அவர் முன்பே தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இது குடும்ப சந்திப்பாகவே உணர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதன் பின், பிரதமரையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சோனியா, ராகுல் காந்தியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்றுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு, ஜன்பத்தில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்றது.

நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி பயணம்

மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பாக ஆண்டு தோறும் நடைபெறும் நீதிஆயோக் கூட்டம், இந்தாண்டு 2025 மே 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின், 2025 மே 23 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை டெல்லிக்கு புறப்பட்டார். டெல்லி விமான நிலையத்தில், அவருக்கு திமுக எம்.பி.க்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நடப்பாண்டு நடக்கும் நீதிஆயோக் கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்டாலின்

முந்தைய ஆண்டுகளில் நீதிஆயோக் கூட்டத்தை புறக்கணித்திருந்த ஸ்டாலின், இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்கும் என அறிவித்திருந்தார். கூட்டத்தில் தமிழகத்தின் நிதி தேவைகளை பிரதமரிடம் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார்.

முதல்வரின் எக்ஸ் பதிவு: ‘குடும்ப சந்திப்பாக உணர்ந்தேன்’

இந்த சந்திப்பைப் பற்றி, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்தியை ஒவ்வொரு முறையும் சந்திக்கும்போது, அது ஒரு நெருக்கமான குடும்ப சந்திப்பைப் போலவே உணர்வை ஏற்படுத்துகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘குடும்ப சந்திப்பாக உணர்ந்தேன்’: ஸ்டாலின்

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ள தகவல்

நீதிஆயோக் கூட்டம் நடைபெறும் இடைவெளியில், பிரதமர் நரேந்திர மோடியை தனிப்பட்ட முறையில் சந்திக்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் நேரம் கேட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சந்திப்புகள், எதிர்கால மாநில-மத்திய அரசுறவுகள் மற்றும் அரசியல் கூட்டணிகள் தொடர்பான முக்கிய முயற்சிகளுக்கு சாட்சியாக கருதப்படுகின்றன.