கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.. 5 பேர் பரிதாபமாக பலி.. சாத்தான்குளத்தில் அதிர்ச்சி!

thoothukudi omni van accident : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் ஆம்னி வேன் விழுந்து விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்.. 5 பேர் பரிதாபமாக பலி.. சாத்தான்குளத்தில் அதிர்ச்சி!

சாத்தான்குளம் ஆம்னி வேன் விபத்து

Updated On: 

18 May 2025 06:13 AM

தூத்துக்குடி, மே 18 : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் ஆம்னி வேன் விழுந்து விபத்துக்குள்ளானது (sathankulam Omni van accident). இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திற்கு ஆலய வழிபாட்டிற்காக ஆம்னி வேனில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 7 பேர் சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது, சாத்தான்குளம் அருகே மீரான்குளத்திற்கு பகுதிக்கு அருகே ஆம்னி வேன் 2025 மே 17ஆம் தேதியான மாலை சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன், திடீரென சாலையொரத்தில் இருந்து கிணற்றுக்குள் விழுந்தது. கிட்டதட்ட 50 அடி ஆழத்தில் இருந்த கிணற்றுக்குள் விழுந்தது. சாலையில் இருந்து கிணற்றுக்கு 20 மீட்டர் தொலைவு இருக்கும்.

கிணற்றுக்குள் பாய்ந்த ஆம்னி வேன்

இதனை அறிந்த உள்ளூர் மக்கள் உடனே போலீசாருக்கும், மீட்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், கிணற்றுக்குள் தவித்து வரும் நபர்களை மீட்க நடவடிக்கை தொடங்கினர். இதில், ஆம்னி வேனில் பயணித்த மூன்று பேரும் தப்பித்து வெளியே வந்துள்ளனர்.

மற்ற ஐந்து பேரும் கிணற்றுக்குள் மூழ்கி இருந்தனர். ஆனால், அவர்களை எளிதாக மீட்க முடியவில்லை. இரவு வரை மீட்பு பணிகள் சென்றது. இறுதியாக 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, ஐந்து பேரை மீட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர்கள் இறந்துவிட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, கிணற்றுக்குள் இருந்த வேனை, கயிறு கட்டி தீயணைப்பு துறையினர் வெளியே எடுத்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வசந்தா, மோசஸ், ரவி கோயில் பிச்சை, ஒன்றரை வயது குழந்தையான கென்ஜி கிருபா மற்றும் ஷாலினி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நிவாரணம் அறித்த முதல்வர் ஸ்டாலின்


இந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், கரூரில் ஆம்னி பேருந்தும் – சுற்றுலா வேனும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.