ராணுவத்திற்காக களமிறங்கும் முதல்வர் ஸ்டாலின்.. நாளை சென்னையில் மாபெரும் பேரணி!
Tamil Nadu CM MK Stalin : இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2025 மே 10ஆம் தேதியான நாளை மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 10ஆம் தேதி ( நாளை) மாலை 5 மணிக்கு சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து போர் நினைவு சின்னம் வரை பேரணி நடைபெற உள்ளது.

முதல்வர் ஸ்டாலின்
சென்னை, மே 09 : இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 2025 மே 10ஆம் தேதியான நாளை மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 10ஆம் தேதி ( நாளை) மாலை 5 மணிக்கு பேரணி நடக்கிறது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து தொடங்கும் பேரணி, போர் நினைவு சின்னம் அருகே நிறைவு பெருகிறது. இந்த பேரணியில் பொதுமக்கள், மாணவர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. 2205 மே 8ஆம் தேதியான இரவு முழுவதும் இருநாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மேலும் பதற்றம் அதிகரித்தது.
நாளை சென்னையில் மாபெரும் பேரணி
இப்படியான சூழலில், தமிழக முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது, இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக, 2025 மே 10ஆம் தேதியான நாளை மாபெரும் பேரணி நடத்தப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த பேரணியில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் அறிவித்து இருக்கிறது.
இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், ”தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.
நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் வரை, எனது தலைமையில் முன்னாள் படைவீரர்கள், அமைச்சர் பெருமக்கள், பொதுமக்கள், மாணவர்கள் பங்குபெறும் பேரணி நடைபெறும். மக்கள் அனைவரும் பங்கேற்று நம் ஒற்றுமையையும் உறுதியையும் காட்டுவோம்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறார்.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
தீவிரவாதத்தை வளர்த்தெடுத்து, தான் கெட்டதோடு இந்தியாவிலும் அத்துமீறல்களில் ஈடுபடுகிறது பாகிஸ்தான். நம்மைக் காக்க வீரத்துடன் போர் நடத்தும் இந்திய இராணுவத்தினருக்கு நம் ஆதரவை வெளிப்படுத்தும் நேரம் இது.
நாளை மாலை 5 மணிக்கு DGP அலுவலகத்தில் இருந்து தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம்… pic.twitter.com/Pxw0Xu2FCb
— M.K.Stalin (@mkstalin) May 9, 2025
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் இந்தியாவுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது. பஹம்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியாக, 2025 மே 8ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளில் உள்ள நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலின்போது, பாகிஸ்தானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்தியா சுட்டு வீழ்த்தப்பட்டது. கிட்டதட்ட 50க்கும் மேற்பட்ட ட்ரோன்களை ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. இதனை அடுத்து, எல்லை மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தகக்து.