விஜயுடன் கைகோர்க்கும் தேமுதிக? முடிவு எடுக்கும் பிரேமலதா.. என்ன மேட்டர்?
TVK - DMDK Alliance : தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கடலூரில் மாநாட்டில் முடிவு எடுக்கப்படும் என தேதிமுக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து பொதுச் செயலாளர் பிரேமலதா முடிவு செய்து அறிவிப்பார்கள் என கூறியுள்ளார்.

விஜய் - பிரேமலதா
சென்னை, மே 4 : தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் (Tamilaga Vettri Kazhagam) கூட்டணி வைப்பது தொடர்பாக கடலூரில் மாநாட்டில் முடிவு எடுக்கப்படும் என தேசிய முற்போக்கு திராவிட கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்து பொதுச் செயலாளர் பிரேமலதா முடிவு செய்து அறிவிப்பார்கள் என கூறியுள்ளார். இது தமிழக அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டே இருக்கும் நிலையில், கூட்டணி கணக்கு மாறுவது பரபரப்பை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் (Tamil Nadu Assembly Election) நடைபெறுகிறது.
விஜயுடன் கைகோர்க்கும் தேதிமுக?
இன்னும் தேர்தலுக்கு சரியாக ஓராண்டு காலமே உள்ளது. இதனால், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக, கூட்டணி பேச்சுவார்த்தை இப்போதே ஆரம்பித்துவிட்டது. ஏற்கனவே, திமுக கூட்டணி வலுவாக இருக்கும் நிலையில், அதிமுக பாஜக அண்மையில் கூட்டணி அமைத்துள்ளது.
மேலும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் சூழலில், தமிழக வெற்றிக் கழகமும் தனித்து போட்டியிடுமோ அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இது தொடர்பாக பேச்சுகள் அடிப்பட்டு வருகிறது. ஒருபக்கம், தமிழக வெற்றிக் கழக கட்சியை பாஜக இழுக்க முயற்சி மேற்கொள்வதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்த சூழலில், தேமுதிக கட்சியின் அறிவிப்பு பரபரப்பை கிளப்பியுள்ளது. அதாவது, தமிழக வெற்றிக் கழக கட்சியுடன் கூட்டணி வைப்பது தொடர்பாக கடலூரில் மாநாட்டில் முடிவு எடுக்கப்படும் என தேதிமுக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமியில் மீது அதிருதியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளார்.
முடிவு எடுக்கும் பிரேமலதா
ஏனென்றால், ராஜ்யசபா சீட் தருவதாக கூறிவிட்டு, தற்போது இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கழட்டி விட்டுள்ளார். இதனால், தேமுதிக அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. இதனால், அடுத்து என்ன செய்வது என தடுமாறிக் கொண்டிருக்கிறது தேமுதிக. அதே நேரத்தில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என்பது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறது. இதில், தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக பிரேமலதா முடிவு எடுப்பார் என பொருளாளர் சுதீஷ் கூறியிருக்கிறது. ஒருவேளை தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் பட்சத்தில், இது தேமுதி தனது வாக்கு வங்கியை மீண்டும் மீட்டெடுக்க வாய்ப்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.