மனை விற்பனையாளர்கள் கவனத்துக்கு..! அரசு அவகாசம் நீட்டிப்பு.. எதற்கு தெரியுமா?
Tamil Nadu Land Regularization Extended: தமிழ்நாட்டில் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கால அவகாசம் 2026 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016 அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகள் இதில் அடங்கும். இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகள்
தமிழ்நாடு மே 21: தமிழகத்தில் (Tamilnadu) அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்திற்கு (Unauthorized subdivision regularization project) விண்ணப்பிக்க கால அவகாசம் 2026 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 2016 அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் உருவாக்கப்பட்டு, குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்பனை செய்யப்பட்ட மனைப்பிரிவுகள் இதற்குப் பொருந்தும். முதலில் 2017-ல் அறிமுகமான இந்த திட்டத்திற்கு பல்லாயிரக்கணக்கானோர் பயன்பெற்றுள்ளனர். கடந்த கால அவகாசம் 2024 பிப்ரவரி 29ல் முடிவடைந்த நிலையில், நகர ஊரமைப்புத் துறை இயக்குநரின் பரிந்துரை மூலம் மேலும் 12 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இணையவழி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது.
அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்திற்கு கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் அனுமதியில்லாமல் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளை சட்டப்பூர்வமாக மாற்றும் (வரன்முறைப்படுத்தும்) திட்டத்திற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம், 2026 ஜூன் 30-ஆம் தேதி வரை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைச் செயலாளர் உத்தரவு
இதற்கான உத்தரவை, மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறைச் செயலாளர் காகோலா உஷா பிறப்பித்துள்ளார். முன்னதாக, 2016 அக்டோபர் 20 அல்லது அதற்கு முன்னர் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகளில் குறைந்தது ஒரு மனையாவது விற்பனை செய்யப்பட்டிருந்தால், அந்த விற்பனை பத்திரம் அதே தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
இந்நிலையில், அந்த வகை மனைப்பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து மனைகள் மற்றும் பிரிவுகளும் வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க 2024 பிப்ரவரி 29 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதியளிக்க வேண்டும்
அதனை தொடர்ந்து, நகர ஊரமைப்புத் துறை இயக்குநர் அரசுக்கு கடந்த ஜனவரியில் அனுப்பிய கோரிக்கையில், மேற்கண்ட விதிமுறைகளுக்குட்பட்டு இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதியளிக்க வேண்டும் எனவும், மேலும் 12 மாதங்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டுமெனவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்ற தமிழக அரசு, 2026 ஜூன் 30 வரை கால அவகாசம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல ஆயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தின் மூலம் பயன்
2016 அக்டோபர் 20 அல்லது அதற்கு முன் உருவாக்கப்பட்ட மனைப்பிரிவுகள் இதில் அடங்கும். இணையதளம் மூலமே விண்ணப்பிக்க வேண்டும். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் இந்த திட்டத்தின் மூலம் பயன் அடைந்துள்ளனர்.
அதன்படி, முறையான விதிமுறைகளை பின்பற்றி, இணையவழி மூலமாக மட்டுமே மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.