5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே இனி அபராதம்.. இந்த தப்பை பண்ணாதீங்க.. முக்கிய அறிவிப்பு!
Chennai Traffic Violations : சென்னையில் இனி 5 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் அருண் அறிவித்துள்ளார். முன்னதாக 25 வகையான போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

சென்னை போக்குவரத்து விதிமீறல்கள்
சென்னை, மே 21 : சென்னையில் 5 வகை போக்குவரத்து விதிமீறல்களுக்கு (chennai traffic violation) மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். கும்பல் கும்பலாக நின்று போககுவரத்து போலீசார் அபராதம் விதிப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, இருசக்கர வாகனங்கள் பீக் ஹவரில் ஊர்ந்து செல்லும் நிலையில் இருக்கும். அதே நேரத்தில், போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, பீக் ஹவரிலும் இரவு நேரங்களிலும் ஆங்காங்கே போலீசார் நின்று கண்காணித்து வருகின்றன்ர.
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்
இதில், போக்குவரத்து விதிமீறல் செய்யும் இருசக்கர வாகனங்கள், கார்களை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். சிக்னல்களை கடந்து செல்பவர்கள், ஹெல்மெட் அணியாதவர்கள், சீட் பெல்ட் அணியாதவர்கள் என மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். இப்படி 25 வகையான விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தான், போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே நின்று சுற்றி வளைத்து அபராதம் விதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, சென்னையில் 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அறிவித்தார்.
வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், நோ என்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் செல்வது, மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் செல்லுதல் ஆகிய 5 வகையான விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
இதன் மூலம், மேற்கண்ட விதிமீறல்களில் ஈடுபடும் இருசக்கர வாகனங்கள், கார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் அதற்கு ஏற்றவாறு தங்களது வாகனங்களை இயக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். எனவே, எவ்வளவு அபராதம் போன்ற விவரங்களை பார்ப்போம்.
எவ்வளவு அபராதம்?
சென்னையில் மதுபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இது தொடர்ந்தால் ரூ.15,000 அல்லது இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கூட விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படுகிறது.
ஓட்டுநருக்கு பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்தாலும் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். கார்களில் சீட் பெல்ட் அணியாமல் வாகனத்தை இயக்கினால் ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும். இருசக்கர வாகனத்தில் இருவருக்கு மேல் சென்றால் ரூ.1,000 முதல் ரூ.3,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் ஆபத்தான முறையிலோ, அதிகவேகமாக வாகனம் ஓட்டினாலோ ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என தெரிகிறது. நோ என்ட்ரியில் வாகனத்தை ஓட்டிச் சென்றால் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.