Rohit Sharma’s Test Retirement: கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு எடுத்த பிசிசிஐ.. அழுத்ததால் ஓய்வை அறிவித்தாரா ரோஹித் சர்மா..?

India Tour of England 2025: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது 2025 இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 24 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவிற்கு கேப்டன்ஷிப் செய்த ரோஹித், 12 வெற்றிகளைப் பெற்றார். இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவது மற்றும் தனது எதிர்காலத் திட்டங்கள் ஆகியவை ஓய்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

Rohit Sharmas Test Retirement: கேப்டன்ஷியில் இருந்து நீக்க முடிவு எடுத்த பிசிசிஐ.. அழுத்ததால் ஓய்வை அறிவித்தாரா ரோஹித் சர்மா..?

ரோஹித் சர்மா

Published: 

07 May 2025 21:16 PM

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் முடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள (India Tour of England 2025) இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா (Rohit Sharma) அறிவித்தது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது. அதன்படி, வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி முதல் இந்திய அணிக்கு புதிய கேப்டன் தலைமை ஏற்பார்.

கேப்டனாக ரோஹித் சர்மா எப்படி..?

24 டெஸ்ட் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமை வகித்துள்ள ரோஹித் சர்மா 12 போட்டிகளில் வெற்றியை தேடி தந்துள்ளார். இதனுடன் 9 போட்டிகளில் தோல்வியும், 3 போட்டிகள் டிராவிலும் முடிந்துள்ளது. இதன்மூலம், இந்தியாவின் 10வது வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெற்றார். 40க்கும் குறைவான டெஸ்ட் போட்டிகளில் இத்தனை வெற்றிகளை எந்த கேப்டனும் இந்திய அணிக்கு பெற்று தந்தது இல்லை. இந்தியாவின் அனைத்து வடிவ கேப்டனாக ரோஹித் பொறுப்பேற்றதிலிருந்து, 2023 இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் 2024 இல் இங்கிலாந்துக்கு எதிராகவும் இந்தியா நல்ல தொடர் வெற்றிகளை பெற்றது. இருப்பினும், அதற்கு பிறகு நடந்த டெஸ்ட் தொடர்கள் குறிப்பிடத்தகுந்த வகையில் இல்லை. ரோஹித் சர்மா கேப்டன்ஷியில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்ததுதான்.

ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது ஏன்..?

டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்க தேர்வாளர்கள் முடிவு செய்ததாகவும், இதற்கு பிசிசிஐ ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, பிசிசிஐ தேர்வுக்குழு ரோஹித் சர்மாவிடம் பேசியது. அதில், தங்களை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவையும் எடுத்துள்ளதாகவும், தொடர்ந்து நீங்கள் வீரராக தொடரலாம் என்று கூறியதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் தனது எதிர்காலம், இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக ஓய்வு பெற முடிவு எடுத்தாக கூறப்படுகிறது.