MS Dhoni Retirement: அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்றே தெரியாது.. எம்எஸ் தோனி சூசகம்! ஐபிஎல் வாழ்க்கை முடிந்துவிட்டதா?
MS Dhoni IPL future: ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகியதை அடுத்து, எம்.எஸ். தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அடுத்த ஐபிஎல் சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து அவர் அளித்த பதில் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. தோனி தனது ஓய்வு குறித்து தெளிவாக எதுவும் கூறவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையைப் பார்க்கும் போது, அவர் இந்த சீசன் முழுவதும் விளையாடுவார் என்பது தெளிவாகிறது.

எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் எம்.எஸ்.தோனி (MS Dhoni) ஐபிஎல் 2025 சீசனில் களமிறங்கியது முதலே எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி எழுந்தது. இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுநேர கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) காயம் காரணமாக ஐபிஎல் 2025 சீசனில் இருந்து விலகிய நிலையில், சென்னை அணியின் கேப்டனாக தோனி பொறுப்பேற்றார். இதன் காரணமாக, எம்.எஸ்.தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடுவார் என்று தெரிந்தது. இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ். தோனி அடுத்த ஐ.பி.எல்.-ல் விளையாடுவாரா இல்லையா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கு எம்.எஸ்.தோனி ஒரு சுவாரஸ்யமான பதில் அளித்தார். தற்போது அது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
என்ன நடந்தது..?
சென்னை சேப்பாக்கத்தில் நேற்று அதாவது 2025 ஏப்ரல் 30ம் தேதி நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிக்கு முந்தைய டாஸின் போது, தோனியிடம் போட்டியை தொகுத்து வழங்கிய டேனி மோரிசன் ” உங்களுக்கு இந்த ரசிகர்களின் கொடுக்கும் இந்த ஆதரவை பார்க்கும்போது, அடுத்த ஆண்டும் நீங்கள் விளையாடுவீர்கள் தானே” என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த எம்.எஸ்.தோனி, “அடுத்த போட்டியில் விளையாடுவேனா இல்லையா என்பது கூட தனக்குத் தெரியாது” என்று தெரிவித்தார். இதைச் சொன்னவுடன், தோனி சிரிக்கத் தொடங்கினார், மோரிசனாலும் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எதனால் தோனி எப்படி சொன்னார், என்ன காரணம் என்ன ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.
தோனி இதை நகைச்சுவையாகச் சொன்னாலும், எப்போதும் போல, அவரது கருத்து ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது ரசிகர்கள் மனதில் தோனி திடீரென ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவாரோ என்ற பயம் எப்போதும் இருக்கும். இருப்பினும், இந்த சீசனில் சென்னையின் நிலைமையையும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஏற்கனவே போட்டிகளில் இருந்து வெளியேறிவிட்டதையும் பார்க்கும்போது, தோனி இந்த சீசன் முழுவதும் விளையாடுவார் என்று தெரிகிறது. கெய்க்வாட் வெளியேறிய பிறகு, கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு எம்.எஸ்.தோனி மீண்டும் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
சிஎஸ்கே பதிவு
All You Need Is Yellove. 💛
Nandri, Superfans for the turnout! 🙏#CSKvPBKS #WhistlePodu 🦁💛 pic.twitter.com/x3SDjJ3Q1B— Chennai Super Kings (@ChennaiIPL) April 30, 2025
தோனி ஓய்வு வதந்தி:
ஐபிஎல் 2025 சீசனில் தோனியின் ஓய்வு குறித்து ஒருமுறை பலமாக பேசப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை தோனி ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது இவரது ஓய்வு பெறுவது குறித்து வதந்திகள் கிளம்பியது. இதற்கு காரணம், தோனியின் பெற்றோர் முதல் முறையாக சென்னை சேப்பாக்கத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியை காண வந்ததுதான். தோனியின் முழு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக, அவரது பெற்றோர் போட்டியைக் காண மைதானத்திற்கு வந்தனர். இதுபோன்ற சூழ்நிலையில், அது தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என்று வதந்திகள் பரவின, ஆனால் அது நடக்கவில்லை.