MS Dhoni Retirement: என் ஓய்வை இதுதான் முடிவு செய்யும்..! எதிர்காலம் குறித்து ஓபனாக பேசிய எம்.எஸ்.தோனி!

MS Dhoni's IPL 2025 Status: கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு சீசன் முடிவிலும் தோனியின் ஓய்வு குறித்த ஊகங்கள் அதிகரிக்கும். அதன்படி, 2025 சீசனிலும் தோனி ஓய்வு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓய்வு குறித்து எம்.எஸ்.தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

MS Dhoni Retirement: என் ஓய்வை இதுதான் முடிவு செய்யும்..! எதிர்காலம் குறித்து ஓபனாக பேசிய எம்.எஸ்.தோனி!

மகேந்திர சிங் தோனி

Published: 

07 Apr 2025 15:26 PM

ஐபிஎல் (IPL) தொடங்கும் ஒவ்வொரு ஆண்டும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, இந்த சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (Chennai Super Kings) விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். கடந்த 2020ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ்.தோனி (MS Dhoni) தற்போது வரை ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். ஐபிஎல் விளையாடப்படும் 2 மாதங்கள் மட்டும் விளையாடிவிட்டு, மீதமுள்ள 10 மாதங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். இருப்பினும், கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு சீசன் முடிவிலும் தோனியின் ஓய்வு குறித்த ஊகங்கள் அதிகரிக்கும். அதன்படி, 2025 சீசனிலும் தோனி ஓய்வு குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்தநிலையில், ஓய்வு குறித்து எம்.எஸ்.தோனி வெளிப்படையாக பேசியுள்ளார்.

நிராகரித்த எம்.எஸ்.தோனி:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்த வதந்திகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். கடந்த 2025 ஏப்ரல் 5ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின்போது எம்.எஸ்.தோனியின் பெற்றோர் பான் சிங் மற்றும் தேவிகா தேவி, இவர்களுடன் மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஷிவா ஆகியோர் வந்திருந்தனர். மனைவி மற்றும் மகள் அடிக்கடி எம்.எஸ்.தோனி விளையாடும் போட்டியை காண வந்திருந்தாலும், ஐபிஎல் முதல் சீசனில் இருந்து சென்னை அணிக்கு விளையாடி தோனியின் ஆட்டத்தை காண அவரது பெற்றோர் வருவது இதுவே முதல்முறை. இதனால் தோனி டெல்லிக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை.

தோனி விளக்கம்:

தொகுப்பாளர் ராஜ் ஷமானியுடனான பாட்காஸ்டில் பேசிய தோனி, “எனது ஓய்வு என்பது இப்போது இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாட ஆசை படுகிறேன். எனக்கு இப்போது 43 வயதாகிறது. இந்த ஜூலை மாதம் தொடங்கியதும் எனக்கு வயது 44 ஆக இருக்கும். எனவே, இதற்கு பிறகு 10 மாதங்கள் கழித்து நான் விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதையும் நான் முடிவு செய்ய மாட்டேன், எனது உடல்நிலையே முடிவு செய்யும். எனவே, இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகு, என்ன நிலை என்று பார்ப்போம்” என்றார்.

சென்னை அணியின் அடுத்த போட்டி எப்போது..?

ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை தனது தொடக்கத்தை மெதுவாகத் தொடங்கியுள்ளது. இந்த சீசனில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. முன்னதாக, சென்னை அணி தனது முதல் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு, நடைபெற்ற 3 போட்டிகளில் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகின்ற 2025 ஏப்ரல் 8ம் தேதி ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Related Stories
World Legends Championship 2025: WLC அரையிறுதியை புறக்கணிக்கிறதா இந்திய அணி..? பதட்டத்தில் பாகிஸ்தான்.. யாருக்கு பின்னடைவு..?
Abhishek Sharma: வெறும் 17 டி20 சர்வதேச போட்டிகள்! ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்த அபிஷேக் சர்மா!
India – England 5th Test: இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5வது டெஸ்ட் எப்போது..? அணியில் இவ்வளவு மாற்றமா..?
India – England 5th Test: ஓவல் பிட்ச் விவகாரம்! மைதான பராமரிப்பாளரிடம் மோதலில் ஈடுபட்ட கம்பீர்.. என்ன நடந்தது?
India’s Kennington Oval Record: ஓவல் ஸ்டேடியத்தில் இந்திய அணியின் சாதனை எப்படி? கடைசியாக எப்போது வென்றது?
Virat Kohli: 2019ல் விராட் கோலியை நீக்க திட்டம் போட்டதா ஆர்சிபி? முன்னாள் ஆல்ரவுண்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்!