IPL 2026: மோசமான சாதனையில் பும்ரா முதலிடம்.. ஐபிஎல் 2026ல் தவிர்ப்பாரா? | TV9 Tamil News

IPL 2026: மோசமான சாதனையில் பும்ரா முதலிடம்.. ஐபிஎல் 2026ல் தவிர்ப்பாரா?

Published: 

21 Mar 2026 21:24 PM

 IST

Jasprit Bumrah: ஐபிஎல்-லில் பந்துவீசுவது மிகவும் கடினமான வேலை. ஏனென்றால், பேட்ஸ்மேன் அதிரடியால் பந்துவீச்சாளர்கள் நிலைகுலைந்து விடுவார். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், ஜஸ்பிரித் பும்ராவே மிகவும் திறமையான பந்துவீச்சாளராக இருந்துள்ளார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், தனது பெயரில் ஒரு விரும்பத்தகாத சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

1 / 5ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்தத் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாட்டில் கவனம் செலுத்தும். ஏனெனில், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தால், வெற்றி நிச்சயம் எளிதாகிவிடும்.

ஐபிஎல் வரலாற்றில் ஆறாவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. இந்தத் தொடரில், மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவின் செயல்பாட்டில் கவனம் செலுத்தும். ஏனெனில், ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தால், வெற்றி நிச்சயம் எளிதாகிவிடும்.

2 / 5

மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. ஆனால், ஐபிஎல்-லில் ஒரு விதியை மீறுவதில் முன்னணியில் இருக்கிறார். ஐபிஎல்-லில் அதிக நோ-பால்களை வீசிய பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராதான்.

3 / 5

ஜஸ்பிரித் பும்ரா 145 இன்னிங்ஸ்களில் பந்துவீசி, 32 நோ-பால்களை வீசியுள்ளார். இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் அதிக நோ-பால்களை வீசியவர் இவரே. இந்த பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 24 நோ-பால்களுடன் 2வது இடத்திலும், இஷாந்த் சர்மா 23 நோ-பால்களுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

4 / 5

ஜஸ்பிரித் பும்ரா 145 இன்னிங்ஸ்களில் 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் மிகவும் வெற்றிகரமான பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா உள்ளார். ஆனால், ஐபிஎல்லில் பும்ரா வீசிய நோ-பால்கள் என்ற ஒரு மோசமான சாதனையாக உள்ளது.

5 / 5

ஐபிஎல் தொடரில் ஜஸ்பிரித் பும்ராவின் நோ-பால் சாதனையை அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான சாதனையாக அமைந்துள்ளார். பும்ரா இதுபோன்ற தவறுகளை இனி வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்று விளையாட்டு ரசிகர்கள் கூறுகின்றனர். மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்று ஐந்து ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us