IPL 2025 Resumes: மே 15 முதல் மீண்டும் ஐபிஎல்.. இன்று கூடும் பிசிசிஐ கூட்டம்..! இடம் தேர்வு குறித்து முடிவெடுப்பதாக தகவல்!

IPL 2025 Postponement Ends: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 போட்டிகள், சண்டை நிறுத்தத்தின் பின்னர் மே 15 முதல் மீண்டும் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மே 11 அன்று BCCI முக்கியக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மீதமுள்ள போட்டிகளின் இடம், அட்டவணை உள்ளிட்டவை மறுபரிசீலனை செய்யப்படும். ஆஸ்திரேலிய வீரர்கள் திரும்பி வருவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

IPL 2025 Resumes: மே 15 முதல் மீண்டும் ஐபிஎல்.. இன்று கூடும் பிசிசிஐ கூட்டம்..! இடம் தேர்வு குறித்து முடிவெடுப்பதாக தகவல்!

ஐபிஎல் அணியின் கேப்டன்கள்

Published: 

11 May 2025 11:34 AM

இந்தியா-பாகிஸ்தான் இடையே (India – Pakistan Tensions) நடந்த பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகள் வருகின்ற 2025 மே 15ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேநேரத்தி, ஐபிஎல் 2025 சீசனில் 10 அணிகளுக்காகவும் விளையாடிய ஆஸ்திரேலிய வீரர்கள் அனைவரும் தங்கள் நாட்டிற்குத் திரும்பிய நிலையில், மீண்டும் அவர்கள் இந்தியா வருவது குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதாவது 2025 மே 11ம் தேதி ஐபிஎல் 2025 சீசன் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு முக்கியமான கூட்டத்தை நடத்த இருக்கிறது. இந்த கூட்டத்தின்போது ஐபிஎல் 2025 சீசனின் மீதமுள்ள போட்டி நடைபெறும் இடம் உட்பட அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட இருக்கிறது.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் முயற்சி காரணமாக ஐபிஎல் 2025 நிறுத்தப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா உட்பட அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் தங்களது நாட்டிற்கு திரும்பிவிட்டனர். அதில், ஒரு சில வீரர்கள் சுற்றுலாவுக்காக மற்ற நாடுகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை நிறுத்தம் காரணமாக, ஐபிஎல் 2025 சீசனுக்காக போட்டி விரைவில் தொடங்கப்படலாம் என்று வீரர்களிடம் பிசிசிஐ தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

பிசிசிஐ கூட்டம்:


இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா பிடிஐயிடம் தெரிவிக்கையில்” இந்தியா – பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்த ஒப்பந்தத்தின் காரணமாக பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் குழு, அதிகாரிகளுடன் இன்று ( 2025, மே 11) கூடி நிலைமை குறித்து விவாதிக்க உள்ளனர். போட்டி அட்டவணையை நாங்கள் தயாரித்து, அதை பாதுகாப்பாக முடிப்பதற்கான சிறந்த வழியை மேற்கொள்வோம். போர் நிறுத்தத்தின் போது முதலில் தீர்மானிக்கப்பட்ட இடங்கள் உட்பட அனைத்து அம்சங்களும் மறுபரிசீலனை செய்யப்படும். விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

ஐபிஎல் 2025 இன் மீதமுள்ள போட்டிகள் எந்த மைதானத்தில் நடைபெறும்?

ESPN Cricinfo படி, 2025 ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகள் சென்னையில் உள்ள சேப்பாக்கம் ஸ்டேடியம், பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி ஸ்டேடியம் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடத்தப்படலாம்.

ஐபிஎல் 2025ல் இன்னும் எத்தனை போட்டிகள் மீதமுள்ளன?

தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது, அதன் பிறகு ஐபிஎல் ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டது. இப்போது இந்த போட்டியும் ஐபிஎல் 2025 தொடங்கும் போது மீண்டும் நடத்தி முடிக்கப்படும். இந்தப் போட்டி உட்பட லீக் ஸ்டேஜில் இன்னும் 13 போட்டிகள் மீதமுள்ளன. இதுதவிர, ஒரு இறுதிப்போட்டி மற்றும் 3 பிளே ஆப் போட்டிகள் நடைபெறவுள்ளது.