RR vs MI: பேட்டிங்கில் ரன் மழை.. விக்கெட்டில் வேட்டை.. ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை ராஜ நடை!
MI Dominant RR: ஐபிஎல் 2025ன் 50வது போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை 217 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா மற்றும் ரயன் ரிக்கல்டன் அரைசதம் அடித்தனர். ராஜஸ்தான் அணி 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கர்ண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 50வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 1ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக ரயன் ரிக்கல்டன் மற்றும் ரோஹித் சர்மா அரைசதம் அடித்திருந்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் மதிஷா தீக்ஷனா மற்றும் ரியான் பராக் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
218 ரன்கள் இலக்கு:
218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த வைபவ் சூர்யவன்ஷி வெறும் 2 பந்துகளை சந்தித்து டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அதேநேரத்தில், போல்ட் வீசிய 2வது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை தூக்கிய ஜெய்ஸ்வால், 3வது பந்தில் க்ளீள் போல்டாகி வெளியேறினார். அடுத்ததாக உள்ளே வந்த ராணா 9 ரன்களிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.4 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது விக்கெட்டை இழந்தது. ரியான் பராக் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜஸ்பிரித் பும்ரா தனது விக்கெட்டை வேட்டையை தொடங்கினார்.
அதிரடியாக விளையாடுவார் என்று நினைத்தபோது ஷிம்ரன் ஹெட்மியர் ஜஸ்பிரித் பும்ரா வேகத்தில் கவிழ்ந்தார். முதல் பந்திலேயே அவர் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இதனால் 5 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் எடுத்து தடுமாறியது. தொடர்ந்து பின்னாடி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை விழ, ஆர்ச்சர் மட்டுமே 27 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 30 ரன்கள் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 100 ரன்களை கடக்க உதவி செய்தார். இருப்பினும் கடைசி விக்கெட்டான அவரது விக்கெட்டையும் போல்ட் வீழ்த்த, ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி:
𝗧𝗵𝗲 𝗳𝗲𝗲𝗹𝗶𝗻𝗴 𝗼𝗳 𝗲𝗾𝘂𝗮𝗹𝗶𝗻𝗴 𝗼𝘂𝗿 𝗺𝗼𝘀𝘁 𝗰𝗼𝗻𝘀𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲 𝘄𝗶𝗻𝘀 (𝟲) 𝗿𝗲𝗰𝗼𝗿𝗱 🤩#MumbaiIndians #PlayLikeMumbai #TATAIPL #RRvMI pic.twitter.com/5REMjye81o
— Mumbai Indians (@mipaltan) May 1, 2025
விக்கெட் வேட்டை நடத்திய மும்பை பந்துவீச்சாளர்கள்:
மும்பை இந்தியன்ஸ் அணியில் கர்ண் சர்மா மற்றும் டிரென்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.