IPL 2025: மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்.. ஆர்சிபிக்கு சாதகமா..?

Royal Challengers Bengaluru vs Kolkata Knight Riders: ஐபிஎல் 2025 சீசனின் பெங்களூரு-கொல்கத்தா போட்டி கனமழையால் பாதிக்கப்பட்டது. போட்டி ரத்து செய்யப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதனால், RCB-க்கு பிளே ஆஃப் வாய்ப்பு அதிகரிக்கும் அதேவேளை, KKR-க்கு பிளே ஆஃப் நம்பிக்கை குறையும். மழை காரணமாக ஏற்படும் புள்ளிப் பகிர்வு இரண்டு அணிகளின் லீக் நிலையையும் பெரிதும் பாதிக்கும்.

IPL 2025: மழையால் ஐபிஎல் 2025க்கு மீண்டும் சதி..? தவிக்கும் கேகேஆர்.. ஆர்சிபிக்கு சாதகமா..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

Published: 

17 May 2025 20:58 PM

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சண்டை (India Pakistan Tensions) காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் இன்று அதாவது 2025 மே 17ம் தேதி தொடங்குகிறது. இருப்பினும், முதலே நாளே மழை குறுக்கே வந்து மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் மழை குறுக்கிட்டதால் டாஸ் தாமதமானது. இதனால் திட்டமிட்டப்படி இரவு 7 மணிக்கு போட்டியில் டாஸ் போட முடியவில்லை. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக டாஸ் மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறதி. இந்தநிலையில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா போட்டி மழையால் ரத்தானால் என்ன நடக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

என்ன நடக்கும்..?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால், தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். அதேநேரத்தில், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புள்ளிகள் பட்டியலில் 17 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடிக்கும். பெங்களூரு அணி தற்போது 11 போட்டிகளில் 8 வெற்றிகளூடன் 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும், பிளே ஆஃப்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எப்படி செயல்படும்..?

மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டால் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளே ஆஃப் கனவு கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று 11 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் ரஹானே தனது கடைசி லீக் போட்டிகளில் வென்றாலும், அதிகபட்சமாக 14 புள்ளிகளை மட்டுமே பெறும். நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏற்கனவே ஒருமுறை ஐபிஎல் 2025 சீசனில் வானிலையின் சீற்றத்தை எதிர்கொண்டது. ஈடன் கார்டனில் பஞ்சாப் கிங்ஸூக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி ஒரு ஓவரிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories