IPL 2025: தர்மசாலாவில் தடம் பதிக்கும் முனைப்பில் பஞ்சாப்..? என்ன திட்டத்தில் ரிஷப் பண்ட் படை..? பிட்ச் விவரம்!

Punjab Kings vs Lucknow Super Giants: ஐபிஎல் 2025ன் 54வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. தர்மசாலாவில் நடைபெறும் இந்தப் போட்டி, பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளின் தற்போதைய நிலை, ஹெட்-டு-ஹெட் சாதனை, வானிலை முன்னறிவிப்பு ஆகியவற்றை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. பிளே-ஆஃப் வாய்ப்புகளைப் பெறுவதற்கு இப்போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானது.

IPL 2025: தர்மசாலாவில் தடம் பதிக்கும் முனைப்பில் பஞ்சாப்..? என்ன திட்டத்தில் ரிஷப் பண்ட் படை..? பிட்ச் விவரம்!

பஞ்சாப் கிங்ஸ் Vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

Published: 

04 May 2025 10:55 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 54வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 4ம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் (Lucknow Super Giants) மோதுகின்றன. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் 2வது சொந்த மைதானமான தர்மசாலாவில் நடைபெறும் முதல் போட்டி இதுவாதும். ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றியும், 3ல் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதன்காரணமாக, பஞ்சாப் அணி (Punjab Kings) 13 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இதுவரை விளையாடிய 10 போட்டிகளில், லக்னோ 5 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் பெற்று புள்ளிப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. பிளேஆஃப் பந்தயத்தில் நீடிக்க, மீதமுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், ஹெட் டூ ஹெட், போட்டி நடைபெறும் தர்மசாலா பிட்ச் எப்படி உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

பிட்ச் எப்படி..?

உலகின் மிக அழகான கிரிக்கெட் ஸ்டேடியமான தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியம் எப்போது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுகிறது. இங்கு பந்துவீச்சாளர்களின் பந்து ஓரளவு பவுன்ஸ் ஆகும் என்பதால் குறுகிய பவுண்டரிகளை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இங்கு 13 போட்டிகள் நடைபெற்றுள்ளன. முதலில் பேட்டிங் செய்த அணி 8 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இலக்கை துரத்தும் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 241 ரன்களுக்கும், குறைந்த பட்சமாக பஞ்சாப் கிங்ஸ் அணி 116 ரன்களும் எடுத்துள்ளது.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் இடையே இதுவரை மொத்தம் 5 போட்டிகள் நடந்துள்ளன. இதில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அதிகபட்சமாக 3 முறையும், பஞ்சாப் கிங்ஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சுவாரஸ்யமாக, இந்த 5 போட்டிகளிலும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியே முதலில் பேட்டிங் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வானிலை எப்படி..?

தர்மசாலாவில் உள்ள HPCA ஸ்டேடியத்தில் வானிலை என்பதை எப்போது சரியாக கணிக்க முடியாது. போட்டி நடைபெறும் நாளான இன்று (04.05.2025) மழை பெய்ய சுமார் 10 சதவீதம் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டியில் சில இடையூறுகள் ஏற்படலாம். மழை பெய்யவில்லை என்றால், ரசிகர்கள் சுவாரஸ்யமான போட்டியை காணலாம்.

இந்த போட்டியில் வானிலையில் வெப்பநிலையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. போட்டியின்போது தர்மசாலாவில் வெப்பநிலை சுமார் 8-9 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கோடைக்காலத்தில் குளுகுளு சூழ்நிலையை தரும்.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி:

ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஆயுஷ் படோனி, டேவிட் மில்லர், அப்துல் சமத், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, அவேஷ் கான்.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், அஸ்மதுல்லா உமர்சாய், ஹர்ப்ரீத் பிரார்/சேவியர் பார்ட்லெட், யுஸ்வேந்திர சிங் சாஹல்.

Related Stories
Devald Brevis DRS Controversy: திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்… இணையத்தில் எழும் குரல்கள்..!
IPL 2025: கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா! பிளே ஆஃப் பாதையில் சிக்கல் வருமா?
RCB vs CSK: முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. கடைசி நேரத்தில் 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
IPL 2025: ஊக்கமருந்தில் சிக்கிய ஐபிஎல் பிரபலம்.. கிரிக்கெட்டில் இடைநீக்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Virat Kohli vs CSK: சென்னைக்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்.. கலக்க காத்திருக்கும் விராட் கோலி..!
ICC Women’s T20 World Cup 2026: லார்ட்ஸில் 3வது முறை இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்.. வாய்ப்பை பயன்படுத்துமா இங்கிலாந்து..?