IPL 2025: கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா! பிளே ஆஃப் பாதையில் சிக்கல் வருமா?
KKR vs RR Match 54 Preview: ஐபிஎல் 2025 இன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமானதாகக் கருதப்படுகிறது. இரு அணிகளின் தற்போதைய நிலை, ஹெட்-டு-ஹெட் சாதனை மற்றும் பிட்ச் அறிக்கை ஆகியவற்றை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அதிகரிக்க இரு அணிகளும் கடுமையாகப் போராடும்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2025 (IPL 2025) இன் 54வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) அணியும் மோதுகிறது. இந்த போட்டியானது கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு வெற்றி வெற்றிபெர்று பிளே ஆஃப் வாய்ப்பை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டு களமிறங்கும். அதேநேரத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்று கௌரவத்தை காத்துகொள்ள போராடும். எனவே, இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன் மற்றும் போட்டி நடைபெறும் பிட்ச் எப்படி உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ஐபிஎல் 2025ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 11 போட்டிகளில் 3 வெற்றிகளையும் 8 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளனர்.
பிட்ச் ரிப்போர்ட்:
கொல்கத்தாவில் ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் உதவிகரமான பிட்சாக பார்க்கப்படுகிறது. போட்டியின் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் மற்றும் நல்ல பவுன்ஸ்களை வீசலாம். பேட்ஸ்மேன்கள் சற்று நிலைத்து நின்றால், அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. பந்து பழையதாகும்போது, சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தலாம்.
ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை மொத்தம் 98 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணி 41 போட்டிகளிலும், 2வது பேட்டிங் செய்த அணி 56 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், ஒரு போட்டி முடிவில்லாமல் முடிந்தது. இந்தநிலையில், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே 30 போட்டிகள் நடந்துள்ளன. இதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதேநேரத்தில், 2 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்தது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ரியான் பராக் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், சுபம் துபே, குயின் எம்பாகா, வனிந்து ஹசரங்கா, துஷார் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ஃபசல்ஹாக் சம்ஜுவார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), குயின்டன் டி காக், வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, சுனில் நரைன், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், ஸ்பென்சர் ஜான்சன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி.