Delhi Capitals: வங்கதேச வீரர் ஐபிஎல்லில் எதற்கு..? டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு..!

Mustafizur Rahman: டெல்லி கேபிடல்ஸ் அணி ஐபிஎல் 2025க்காக வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை சேர்த்ததால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. ஜாக் ஃப்ரேசர் மெக்கர்க்கிற்கு பதிலாக சேர்க்கப்பட்ட முஸ்தாபிசுர், பின்னர் பாகிஸ்தான் பிரீமியர் லீக்கில் விளையாட UAE செல்வதாக அறிவித்தார். இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணியை பலர் விமர்சித்து #boycottdelhicapitals ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த சர்ச்சையின் பின்னணியை இங்கே காண்போம்.

Delhi Capitals: வங்கதேச வீரர் ஐபிஎல்லில் எதற்கு..? டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ரசிகர்கள் கொந்தளிப்பு..!

டெல்லி கேபிடல்ஸ்

Published: 

15 May 2025 15:54 PM

ஐபிஎல் 2025க்கான (IPL 2025) டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஐபிஎல்லில் மீதமுள்ள போட்டிக்கு ஜாக்ஃப்ரேசர் மெக்கர்க்கிற்கு பதிலாக முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafizur Rahman) அணியில் சேர்க்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பிறகு, சில நெட்டிசன்கள் டெல்லி கேபிடல்ஸ் அணியின் தேர்வை விமர்சித்து, டெல்லி அணியை பாய்காட் செய்ய வேண்டும் என்று ட்ரோல் செய்து வருகின்றனர். என்ன நடந்தது..? திடீரென கிரிக்கெட் ரசிகர்கள் டெல்லி அணியை விமர்சிக்க காரணம் என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

டெல்லி கேபிடல்ஸ் அணி:

கடந்த 2025 மே 14ம் தேதி டெல்லி கேபிடல்ஸ் அணி மாலை 4 மணிக்கு தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் 2 ஆண்டுகளுக்கு பிறகு முஸ்தாபிசுர் ரஹ்மான் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளதாக அறிவித்தது. இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனின் எஞ்சிய பகுதிகளுக்கு கிடைக்காத ஜேக் ப்ரேசர் மெக்கர்க்கிற்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களுக்கு பிறகு, அதாவது இரவு 7.24 மணிக்கு வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தான்பிசுர் ரஹ்மான் தனது சமூக ஊடகப் பக்கம் மூலம் பாகிஸ்தான் பிரீமியர் லீக் 2025ல் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்வதாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்:

வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிஜாமுதீன் சவுத்ரி ESPNcricinfoவில் பேசியதாவது, “முஸ்தாபிசுர் ரஹ்மான் அட்டவணைப்படி அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்ல வேண்டும்.” என்றார். ஐபிஎல் அதிகாரிகளிடமிருந்து எங்களுக்கு எந்த செய்தியும் வரவில்லை. முஸ்தாபிசூரிடமிருந்து எனக்கு அப்படி எந்த செய்தியும் வரவில்லை. முஸ்தாபிசூரிடமிருந்து எனக்கும் அப்படி எந்த செய்தியும் வரவில்லை. முஸ்தான்பிசூரிடமிருந்து எனக்கும் அப்படி எந்த அதிகாரப்பூர்வ செய்தியும் வரவில்லை” என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், வங்கதேச கிரிக்கெட் வீரர் முஸ்தான்பிசுர் ரஹ்மானை ஐபிஎல்லில் சேர்க்க கூடாது என்ற கோரிக்கை சமூக ஊடகங்களில் சூடுபிடித்துள்ளது. இந்த விஷயம் மிகவும் பெரிதாகும் அளவுக்கு #boycottdelhicapitals என்பது எக்ஸில் ட்ரெண்டிங்கில் உள்ளது. ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் அனைத்து அணிகளும் வங்கதேச வீரர்களை புறக்கணித்தன. பிறகு ஏன் டெல்லி கேபிடல்ஸ் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றன.

டெல்லி கேபிடல்ஸ் ஐபிஎல் 2025 சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி 5 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றாக வேண்டும். இந்தநிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி முஸ்தான்பிசுர் ரஹ்மான் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, தற்போதைய அரசியலில் சூழலில் வங்கதேச வீரரை விளையாட அழைப்பது உணர்வற்றது என்று பல நெட்டிசன்கள் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு பயனர், “வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அனைத்து அணிகளும் ஐபிஎல் ஏலத்தில் வங்கதேச வீரர்களை புறக்கணித்தன. டெல்லி கேபிடல்ஸ் இப்போது வெட்கமின்றி வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது” என்று கேள்வி எழுப்பினார்.