India’s Next Test Captain: புறக்கணிக்கப்பட்ட பும்ரா! டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் களம்.. விரைவில் பிசிசிஐ அறிவிப்பு!

Rohit Sharma Retires from Test Cricket: ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனை தேர்வு செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது. சுப்மன் கில் கேப்டன் பதவிக்கு முன்னணிப் போட்டியாளராகக் கருதப்படுகிறார். இருப்பினும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரும் பரிசீலிக்கப்படுகின்றனர்.

Indias Next Test Captain: புறக்கணிக்கப்பட்ட பும்ரா! டெஸ்ட் கேப்டனாக இளம் வீரர் களம்.. விரைவில் பிசிசிஐ அறிவிப்பு!

சுப்மன் கில் - ரிஷப் பண்ட்

Published: 

07 May 2025 23:17 PM

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா (Rohit Sharma) யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று அதாவது 2025 மே 7ம் தேதி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும், தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவேன் என்றும் அறிவித்தார். ரோஹித் சர்மா டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் அடுத்த டெஸ்ட் போட்டி ஜூன் 20 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள இங்கிலாந்து சுற்றுப்பயணம் (India Tour of England 2025) மேற்கொள்ள இருப்பதால், அணியின் கேப்டன் பதவியை அறிவிப்பதும் முக்கியம். இந்த நிலையில், அதற்குள் தேர்வுக்குழு புதிய கேப்டனை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்த கேப்டன் யார்..?

ரோஹித் சர்மாவிற்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில்லை நியமிக்க தேர்வுக் குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர், பிசிசிஐ உயர் அதிகாரிகளுடனான சந்திப்பிற்குப் பிறகுதான் இது உறுதிப்படுத்தப்படும். இந்திய அணியின் உலக சாம்பியன்ஷிப் 2025-27 இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் தொடங்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு இளம் வீரரை புதிய கேப்டனாக நியமிக்க பிசிசிஐ அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

பும்ரா கேப்டனாக நியமிக்க ஏன் தயக்கம்..?

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மாவுக்கு பிறகு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வலுவான போட்டியாளராக இருந்தாலும் பிசிசிஐ பும்ரா நியமிக்க சற்று தயக்கம் காட்டி வருகிறது. அதற்கு காரணம், பும்ராவிற்கு அடிக்கடி ஏற்படும் காயம்தான். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின்போது பும்ரா காயமடைந்தார். இதன் காரணமாக, பும்ராவால் 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை. ரோஹித் இல்லாதபோது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது பெர்த் மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டிகளிலும் அவர் அணியின் தலைவராக இருந்தார். பெர்த்தில் அவரது தலைமையில் இந்திய அணி டெஸ்ட் போட்டியையும் வென்றது. இருப்பினும், பும்ராவின் தொடர்ச்சியான காயங்கள் காரணமாக, தேர்வாளர்கள் சுப்மன் கில்லை பரிசீலிக்கின்றன.

கே.எல்.ராகுல்:

கே.எல். ராகுல் கேப்டன் பதவிக்கு ஒரு நல்ல தேர்வாகும். அவருக்கு வெளிநாட்டில் விளையாடிய அனுபவமும் உள்ளது, மேலும் அவருக்கு கேப்டன்சி அனுபவமும் உள்ளது. கே.எல்.ராகுல் இதுவரை இந்தியாவுக்காக 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரது தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாகவும் கே.எல்.ராகுலை தேர்வுக்குழு புறக்கணிக்கலாம்.