India Test Squad: கேப்டனாக களம் காணும் சுப்மன் கில்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

India vs England Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2025 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகியோர் தொடக்க வீரர்களாக உள்ளனர். சாய் சுதர்ஷன் மற்றும் கருண் நாயர் ஆகியோர் மிடில் ஆர்டரில் இடம் பெற்றுள்ளனர்.

India Test Squad: கேப்டனாக களம் காணும் சுப்மன் கில்.. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு..!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

Updated On: 

24 May 2025 14:22 PM

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான (India Squad For England Tour 2025) இந்திய அணி வெளியிட்டுள்ளது. இந்த தொடர் 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் ஒரு பகுதியாக அமைக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின், ரோஹித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில் இந்திய அணி எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், இந்திய டெஸ்ட் அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட்டுள்ளார். அஜித் அகர்கர் (Ajit Agarkar) தலைமையிலான தேர்வுக்குழு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இளம் அணி இந்திய அணியை தேர்ந்தெடுத்துள்ளது.

யார் புதிய கேப்டன்..?

இந்திய டெஸ்ட் அணியின் டெஸ்ட் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், 3வது இடத்தில் களமிறங்கலாம். யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரர்களாக களமிறங்கலாம். விராட் கோலி இல்லாத நிலையில், மிடில் ஆர்டரில் சாய் சுதர்ஷன் மற்றும் கருண் நாயர் ஆகிய இருவரில் யாரெனும் 4வது இடத்தில் விளையாட வாய்ப்புள்ளது. ரிஷப் பண்ட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில், 2வது விக்கெட் கீப்பராக துருவ் ஜூரெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2025 ஐபிஎல் போட்டியில்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.. இதற்கு முன்பு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல ஷ்ரேயாஸ் ஐயர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான 18 பேர் கொண்ட அணியை பிசிசிஐ அறிவித்தது. இதில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய 6  வேகப்பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் குல்தீப் யாதவ் என 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கருண் நாயர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு, கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். இவர் கடைசியாக இந்தியாவுக்காக கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிடான டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர், துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்க்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.