Virat Kohli Test Retirement: ஓய்வு முடிவை விராட் கோலி எப்போது எடுத்தார்..? விளக்கமளித்த அஜித் அகர்கர்..!
India Squad For England Tour 2025: இங்கிலாந்துக்கு எதிரான 2025 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய மூன்று முக்கிய வீரர்களும் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மூவரும் ஓய்வு அறிவித்ததை அடுத்து, சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முகமது ஷமியின் உடல்நிலை காரணமாக அவர் அணியில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி - அஜித் அகர்கர்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி (India Squad For England Tour 2025) அறிவிக்கப்பட்டது. சரியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரோஹித் சர்மா இல்லாத ஒரு டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 ஜாம்பவான்களும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபிக்கு பிறகு தங்களது ஓய்வை அறிவித்தனர். இதில், விராட் கோலி (Virat Kohli Retirement) ஓய்வு பலரையும் அதிர்ச்சியடைய செய்தது. கோலியை பிசிசிஐதான் (BCCI) ஓய்வுபெற அறிவுறுத்தியதா என்று பல்வேறு கருத்துகள் பரவியது. தற்போது, இதற்கு பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
பிசிசிஐ விளக்கம்:
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த சில நாட்களுக்கு பிறகு, விராட் கோலியும் 2025 மே மாத தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணி தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் அறிவிப்பின்போது விராட் கோலி ஓய்வு குறித்து பேசினார். அப்போது அவர், “2025 ஏப்ரல் மாத தொடக்கத்தில் விராட் கோலி என்னை தொடர்புகொண்டு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து முடிவு செய்துவிட்டதாகவும், இப்போது அதற்கான நேரம் வந்துவிட்டது.” என்றார்.
சுப்மன் கில் கேப்டன்:
சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டடு குறித்து பேசிய அஜித் அகர்கர், “கடந்த ஒரு வருட காலத்திற்கு மேலாக நாங்கள் சுப்மன் கில்லின் கேப்டன்ஷியை கவனித்து வருகிறோம். அதன்படியே, சுப்மன் கில் இந்திய அணியை முன்னோக்கி அழைத்து செல்ல சரியானவர் என்று நாங்கள் நம்புகிறோம். அவருக்கு எங்களது நல்வாழ்த்துகள்” என்றார்.
ஷமி குறித்து பேசிய அஜித் அகர்கர், “முகமது ஷமியின் உடற்தகுதி இன்னும் சரியாக இல்லை. ஷமி இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அவர் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது. மேலும், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து ஷர்ஷித் ராணா மற்றும் சர்பராஸ் கான் நீக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன் & விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்