IPL 2025 Venues: சென்னை, பெங்களூருவுக்கு மாற்றப்படும் ஐபிஎல் போட்டிகள்..? பிசிசிஐ பக்கா பிளான்!
India Pakistan Tension: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 சீசன் ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டது. பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிக்குப் பிறகு, பிசிசிஐ பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்தது. போட்டிகள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீரர்கள் பாதுகாப்பாக டெல்லி அழைத்துச் செல்லப்பட்டனர்.

ஐபிஎல் 2025
இந்தியா பாகிஸ்தானுக்கு (India- Pakistan Tension) இடையிலான தாக்குதல் காரணமாக சிறப்பாக நடைபெற்ற ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஒரு வாரத்திற்கு இடைநிறுத்தம் செய்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடும் பதற்றம் காரணமாக பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது. ஆனால், ஒரு வாரத்திற்கு பிறகு ஐபிஎல் மீண்டும் தொடங்கும்போது, மீதமுள்ள போட்டிகளின் இடங்கள் மாற்றப்பட இருக்கிறது. அதன்படி, பிசிசிஐ இப்போது இந்தியாவில் சற்று பதட்டமில்லாத 4 நகரங்களை தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் நடைபெறும் 4 நகரங்கள்:
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தியின்படி, ஐபிஎல்லின் மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு பிசிசிஐ தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, ஐபிஎல் ஒரு வாரத்திற்கு பிறகு தொடங்கினால் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் என 2 தென்னிந்தியாவில் உள்ள ஸ்டேடியங்களிலும், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்திலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு செய்யலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையில் நிலவும் பதட்டத்தை பொறுத்தே பிசிசிஐ இந்த முடிவையும் எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டி எப்போது இடைநிறுத்தம் செய்யப்பட்டது..?
🚨 #BCCI suspends #IPL2025 for 1 week 🚨
The development comes amidst cross-border tensions between India & Pakistan#iplsuspended pic.twitter.com/XWIoBqxQJT
— Bihan Sengupta (@BihanSengupta91) May 9, 2025
கடந்த 2025 மே 8ம் தேதி தர்மசாலாவில் உள்ள ஸ்டேடியத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்திருந்தபோது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. காரணம், அந்த நேரத்தில்தான் இந்தியாவில் ஜம்மு, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலம் பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அப்போது, இந்திய இராணுவம் பாகிஸ்தானில் அனைத்து முயற்சியையும் முறியடித்தது. இதன் காரணமாக அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு போட்டியை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. இதன் பின்னர், மைதானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
வந்தே பாரத் மூலம் டெல்லி வந்தடைந்த வீரர்கள்:
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு அணிகளை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் என சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் பாதுகாப்பாக டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, வீரர்களின் பாதுகாப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று பிசிசிஐ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.